"அம்மா"வுக்காக அம்மனுக்கு கையை வெட்டி காணிக்கை செய்த அதிமுக தொண்டர்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றியையடுத்து தனது கையை வெட்டி பத்ரகாளியம்மன் கோவில்உண்டியலில் போட்டுள்ளார் ஒரு தீவிர "அம்மா பக்தர்".
தஞ்சாவூர் மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த ஒரு அதிமுக தொண்டர் சில மாதங்களுக்கு முன்பு தனது நாக்கை வெட்டிதிருப்பதி உண்டியலில் போட்டு பெரும் பரபரப்பு ஏற்படுத்தியதை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க டியாது.
அதற்குள் இன்னொரு பயங்கர சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்துள்ளது.
முதுகுளத்தூர் அருகே உள்ள உச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன், தீவிர அதிமுக தொண்டர்இவர். ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தால் தனது கையை வெட்டிஅம்மனுக்கு காணிக்கை செலுத்துவதாக இவர் வேண்டியிருந்தாராம்.
கடந்த பிப்ரவரி இடைத் தேர்தலில் ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா வெற்றி பெற்று முதல்வர் பொறுப்பிலும்அமர்ந்தார். இதையடுத்து தனது காணிக்கையை நிறைவேற்ற நல்ல நாள் பார்த்துக் காத்திருந்தார் பாலசுப்ரமணியன்.
இந்நிலையில் சமீபத்தில் சிவகாசியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா வந்தது. அப்போது தனதுகாணிக்கையை நிறைவேற்ற முடிவு செய்தார் பாலசுப்ரமணியன்.
கோவிலுக்குச் சென்ற அவர் தனது கையை வெட்டி பின்னர் அதை கோவில் உண்டியலிலும் போட்டுள்ளார். இதைப்பார்த்து பயந்து போன கோவிலுக்கு வந்த மற்ற பக்தர்கள் அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு வெட்டப்பட்டகையுடன் கொண்டு சென்றனர்.
ஆனால் அவரது கையை மீண்டும் சேர்த்து வைக்க முடியாது என்று டாக்டர்கள் தெரிவித்து விட்டனர்.
57 வயதாகும் பாலசுப்ரமணியனுக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களில் 2 பேருக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டார். மூன்றாவது மகளுக்கு திருமணம் செய்து வைக்க வறுமையாக தடையாக இருக்கிறது.
இந்த நிலையில் ஜெயலலிதாவுக்காக தியாகம் செய்தால் ஏதாவது உதவி கிடைக்கலாம் என்று சிலர் அறிவுரைகூறியதாகத் தெரிகிறது. ஏற்கனவே தீவிர ஜெயலலிதா பக்தரான பாலசுப்ரமணியம், இந்த அறிவுரையை நம்பிகையைத் துண்டித்து இப்போது தனது வாழ்க்கையையே முடமாக்கிக் கொண்டுள்ளார்.
நாக்கை வெட்டிக் கொண்ட அதிமுக தொண்டருக்கு உதவித் தொகை அளித்ததோடு நில்லாமல், அவருக்குபிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மீண்டும் நாக்கைப் பொருத்துவதற்கான மருத்துவ வசதிகளையும் ஜெயலலிதா அளித்தார்என்பது குறிப்பிடத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications