வெயில் கொடுமை: இந்தியா நாடு 439 பேர் சாவு
டெல்லி:
இந்தியாவில் இந்த ஆண்டு நிலவும் கடுமையான கோடையின் வெப்பத்துக்கு இதுவரை 439 பேர் இறந்துள்ளனர்.
சமீப காலங்களில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கோடை வெயில் இந்திய மக்களை வாட்டியெடுக்கத்தொடங்கி விட்டது.
குளிர் காலத்தில் உறைபனியால் மூடப்படும் தலைநகர் டெல்லி கூட கோடை காலத்தில் கடும் வெப்பத்தால் சிக்கித்தவிக்கிறது. அங்கு 110 டிகிரி பாரன்ஹீட்டையும் தாண்டி வெப்பநிலை நிலவி வருகிறது.
ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்களிலும் வெயில் வெளுத்து வாங்குகிறது.ஆந்திராவில் மட்டும் இதுவரை 373 பேர் வெயில் காரணமாக இறந்துள்ளனர். பலர் நடு ரோட்டிலேயே சுருண்டுவிழுந்து இறந்தனர்.
மத்திய பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் 10க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
தமிழகத்திலும் வெயில் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இங்கு இதுவரை 5 பேர் இறந்துள்ளனர். சென்னையில்தொடர்ந்து 4வது நாளாக 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தால் அந்நகர மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இந்தக் கடும் வெயிலுக்கு இடையே, திடீர் திடீரென்று அறிவிக்கப்படாத மின் வெட்டுக்களும் மக்களைப் பெரிதும்இம்சித்து வருகின்றன. இதனால் மக்கள் வெளியிலும் செல்ல முடியாமல், வீட்டிற்குள்ளும் இருக்க முடியாமல்மிகுந்த அவஸ்தைப்பட்டு வருகின்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications