குழாயடிச் சண்டை போடும் அதிமுக-திமுக: இளங்கோவன்
சென்னை:
தமிழக சட்டசபையில் நடந்த விவாதங்களின்போது குழாயடிச் சண்டை போல அதிமுகவினரும் திமுகவினரும்சண்டை போட்டு நேரத்தை விரயமாக்கினர் என்று தமிழக காங்கிரஸ் தலைவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்கூறினார்.
இதுகுறித்து இன்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
அதிமுகவும் திமுகவும் சட்டசபையில் பரஸ்பரம் ஒருவரையொருவர் தாக்கிப் பேசிக் கொண்டார்களே தவிர வேறுஎதுவும் இந்த ஓராண்டில் சாதிக்கப்படவில்லை.
சட்டசபை விவாதத்தின் போது குழாயடிச் சண்டை போல இரு கட்சிகளும் ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்வார்கள்.இவ்வாறு அவர்கள் நேரத்தை மட்டும் விரயமாக்கினார்களே தவிர, மக்களுக்காக எந்தவிதமான நன்மையையும்செய்யவில்லை.
அரசு ஊழியர்கள், விவசாயிகள், மாணவர்கள் போன்றோரின் இன்னல்கள் தீர்ந்த பாடில்லை. அத்தியாவசியபொருட்களின் விலையை உயர்த்தி உள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இதனால் ஒரு வேளை உணவு கூட உண்ணமுடியாத கொடுமைக்கு ஏழை எளியோர் தள்ளப்பட்டுள்ளனர்.
இவை தான் அதிமுக அரசு ஒராண்டு ஆட்சிப் பொறுப்பில் இருந்த செய்த சாதனைகள்.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர்வேலுப்பிள்ளை பிரபாகரனைக் கைது செய்ய மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து தமிழக அரசு தீர்மானம்நிறைவேற்றி இருப்பது மட்டும் வரவேற்கத்தக்கது என்றார் இளங்கோவன்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications