செங்கை சிவம் விவகாரம்: கருணாநிதியின் திட்டம் தோல்வி - ஜெ.
சென்னை:
முன்னாள் எம்.எல்.ஏவான செங்கை சிவத்தை 3 தொகுதிகளிலும் போட்டியிடச் செய்து எதற்காகவோ திட்டமிட்டுகடைசியில் அதன் தலைவரான கருணாநிதி தோல்வியைத்தான் சந்தித்துள்ளார் என்றார் தமிழக முதல்வர்ஜெயலலிதா கூறினார்.
இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டவர்களின் கதி என்னவாகும் என்பதை மக்களுக்குத்தெரியப்படுத்துவதற்காக, செங்கை சிவத்தை மூன்று தொகுதிகளிலும் மனுத் தாக்கல் செய்யுமாறு திமுக தலைமைஏவி விட்டது.
ஆனால் அச்சிறுப்பாக்கத்தில் மட்டும் செங்கை சிவத்தின் மனு நிராகரிக்கப்பட்டது. சைதாப்பேட்டையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அவருடைய மனு, வாணியம்பாடியில் இன்னும் பரிசீலனையே செய்யப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் நிருபர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த ஜெயலலிதாகூறியதாவது:
நீங்கள் கூறித்தான் இது எல்லாமே எனக்குத் தெரிய வருகிறது.
எதையோ எதிர்பார்த்து திமுகவினர் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அந்தத் திட்டத்தில் அவர்கள் தோல்வியடைந்துவிட்டனர்.
இதற்கு மேல் இது குறித்து நான் வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை என்றார்.
இரண்டுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவதால் மூன்று தொகுதிகளிலுமே அவருடைய வேட்பு மனுக்கள்ரத்து செய்யப்படும் என்று திமுக எதிர்பார்த்தது.
கடந்த தேர்தலின்போது நான்கு தொகுதிகளில் மனுத் தாக்கல் செய்து அனைத்து இடங்களிலுமே போட்டியிடமுடியாமல் போன ஜெயலலிதா, இதற்கு திமுக தான் காரணம் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
ஜெயலலிதாவின் இந்தக் குற்றச் சாட்டை மறுக்கும் விதமாகவே, செங்கை சிவம் மூலமாக அவருடைய இந்தக்குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்க திமுக நினைத்தது.
சைதாப்பேட்டையில் செங்கை சிவத்தின் மனுவை நிராகரிக்கச் செய்வதற்காக திமுக வழக்கறிஞரான ஆர்.எஸ்.பாரதி எவ்வளவோ முயற்சித்தார். ஆனால் அதை ஏற்றுக் கொள்வதாக சைதாப்பேட்டை தேர்தல் அதிகாரியானஜெயேந்திர சேவியர் அறிவித்து விட்டார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications