அச்சிறுப்பாக்கத்தில் அதிமுகவினர் அராஜகம்
அச்சிறுப்பாக்கம்:
சமீபத்தில் மறைந்த அச்சிறுப்பாக்கம் தொகுதியின் எம்.எல்.ஏவான செல்வராஜின் மனைவியையும் அவருடையஉறவினர்களையும் அதிமுகவில் சேரச் சொல்லி அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் மிரட்டுவதாக பாமகதலைவரான ஜி.கே. மணி புகார் கூறினார்.
அச்சிறுப்பாக்கத்தில் பாமக வேட்பாளரான பார்வேந்தனுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வதற்காக வந்திருந்த மணிநிருபர்களிடம் கூறியதாவது:
அரசு அலுவலகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் சுவர்களில் அதிமுகவினர் தேர்தல்விளம்பரங்களை எழுதியுள்ளனர். இது சட்டத்திற்கு விரோதமானது.
ஆட்சியில் இருப்பதால் அதிமுக தொடர்ந்து இதுபோன்ற அதிகாரத் துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது.
மேலும் மறைந்த செல்வராஜின் மனைவியையும் அவருடைய குடும்பத்தினரையும் அதிமுகவில் சேர வேண்டும்என்று சில அமைச்சர்களும் அக்கட்சி எம்.எல்.ஏக்களும் மிரட்டி வருகின்றனர். அப்படிச் சேராவிட்டால் கொன்றுவிடப் போவதாவும் மிரட்டியுள்ளனர்.
இவர்களைத் தவிர பாமகவைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களையும் கூட அதிமுகவில் வந்துசேராவிட்டால் தொலைத்து விடுவோம் என்று அதிமுகவினர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
தேர்தல் பயத்தினால் வன்முறையைக் கட்டவிழ்த்து விட அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர். எனவே தேர்தல்பாதுகாப்பாக நடைபெறுவதற்காக இங்கு கூடுதல் பார்வையாளர்களையும் சிறப்பு பாதுகாப்புப் படையினரையும்தமிழகத்துக்கு அனுப்ப வேண்டும் என்றார் மணி.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications