சைதை, வாணியம்பாடியில் செங்கை சிவம் வேட்பு மனு வாபஸ்
சென்னை:
சைதாப்பேட்டை, வாணியம்பாடியில் தொகுதிகளில் தனது வேட்பு மனுக்களை தேர்தல் கமிஷன் ஏற்றுக்கொண்டதையடுத்து இரு மனுக்களையும் இன்று வாபஸ் பெற்றார் திமுக முன்னாள் எம்.எல்.ஏவான செங்கைசிவம்.
இரண்டுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுபவர்களின் கதி என்னவாகும் என்பதை மக்களுக்குத்தெரியப்பத்துவதற்காக, சைதாப்பேட்டை, வாணியம்பாடி மற்றும் அச்சிறுப்பாக்கம் ஆகிய மூன்று தொகுதிகளிலும்செங்கை சிவத்தை மனுத் தாக்கல் செய்யும்படி திமுக ஆணையிட்டது.
இதன்மூலம் கடந்த தேர்தலில் ஜெயலலிதாவின் 4 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு திமுக தான்காரணம் என்ற குற்றச்சாட்டையும் களங்கத்தையும் துடைக்க திமுக திட்டமிட்டிருந்தது.
அதன்படியே செங்கை சிவம் மூன்று தொகுதிகளிலும் தாக்கல் செய்தார். இரண்டுக்கு மேற்பட்ட தொகுதிகளில்தாக்கல் செய்துள்ளதால் அவருடைய அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக நினைத்தது.
ஆனால் அச்சிறுப்பாக்கத்தில் மட்டும் செங்கை சிவத்தின் மனுவை நேற்று தள்ளுபடி செய்த தேர்தல் கமிஷன்,சைதாப்பேட்டையில் அதை ஏற்றுக் கொண்டது. வாணியம்பாடியிலோ இன்று பிற்பகல் வரை பரிசீலனை செய்துகொண்டிருப்பதாகக் கூறியது. மாலையில் வேட்பு மனுவை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது.
சைதாப்பேட்டையில் அவருடைய மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று திமுக வழக்கறிஞரான ஆர்.எஸ்.பாரதி எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் செங்கை சிவத்தின் மனுவை எந்தவிதமானபிரச்சனையும் இல்லாமல் தேர்தல் அதிகாரியான ஜெயேந்திர சேவியர் ஏற்றுக் கொண்டு திமுகவுக்கு அதிர்ச்சிதந்தார்.
அதே போல வாணியம்பாடியிலும் செங்கை சிவத்தின் மனு ஏற்கப்பட்டதால் திமுகவுக்கு இன்றும் இன்னொருஅதிர்ச்சி கிடைத்தது.
சைதாப்பேட்டையில் தொகுதியில் ஏற்கனவே திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மா.சுப்பிரமணியம் களத்தில்இருப்பதாலும், தேர்தல் கமிஷனுடன் விளையாடிப் பார்க்கவே செங்கை சிவத்தை மூன்று தொகுதிகளிலும் மனுத்தாக்கல் செய்யச் சொல்லி திமுக தலைமை கூறியிருந்ததாலும், இத்தொகுதியில் செங்கை சிவம் தன்னுடைய வேட்புமனுவை நிச்சயம் வாபஸ் பெறுவார் என்று கூறப்பட்டது.
அவர் தன்னுடைய மனுவை வாபஸ் பெறுவார் என்று திமுக தலைவர் கருணாநிதியும் கூறியிருந்தார்.
இந்நிலையில் சைதாப்பேட்டை தொகுதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தன்னுடைய வேட்பு மனுவை செங்கை சிவம்இன்று காலை வாபஸ் பெற்றுக் கொண்டார்.
மாலையில் வாணியம்பாடியிலும் வாபஸ் பெற்றுக் கொண்டார்.
இது அரசியல்ரீதியில் திமுகவுக்குக் கிடைத்த மிகப் பெரிய அடி என்று கருதப்பட்டாலும் ஜெயலலிதாவுக்கு ஒரு நீதி,திமுகவுக்கு ஒரு நீதி என்று தேர்தல் கமிஷன் நடந்து கொண்டிப்பது மக்களிடையே பலவிதமான சந்தேகங்களைஏற்படுத்தியுள்ளது.
இதற்கான விளக்கத்தை தேர்தல் கமிஷன் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications