வாணியம்பாடி போலீஸ் நிலையத்தில் பெண்கள் கற்பழிப்பு: 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வாணியம்பாடி போலீஸ் நிலையத்தில் பெண்கள் கற்பழிக்கப்பட்டதாக எழுந்துள்ள புகாரையடுத்து,அந்நிலையத்தின் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோரை சஸ்பெண்ட் செய்ய முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தர்மபுரி-வேலூருக்கு இடையே உள்ள ஊத்தங்கரை தாலுகாவில் ஏலச்சூர் கிராமத்தில் குறவர் இனத்தைச் சேர்ந்தஏராளமான பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க யாரும் இல்லாததால்வாணியம்பாடியில் இருந்து போலீசார் அடிக்கடி இந்தப் பகுதிக்கு வந்து பெண்களிடம் தவறாக நடந்து கொண்டுவந்துள்ளனர்.

இந் நிலையில் சமீபத்தில் பார்க்க நன்றாக இருக்கும் சில பெண்களை விசாரணைக்கு அழைத்துச் செல்கிறோம் என்றுகூறி வாணியம்பாடி காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்ற போலீசார் அங்கு வைத்து அப்பெண்களைகற்பழித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மங்கம்மாள் மற்றும் மணிமேகலை (18) ஆகிய இரு பெண்களும் வெளிப்படையாகவே தாங்கள்கற்பழிக்கப்பட்டது குறித்து நிருபர்களிடம் கூறினர். மேலும் பல பெண்களிடமும் போலீசார் அத்துமீறி நடந்துகொண்டுள்ளனர். இது குறித்துத் தட்டிக் கேட்ட 11 பேரை பொய் கேஸ் போட்டு சிறையில் தள்ளியுள்ளனர்.

காவல் நிலையத்தில் நடந்துள்ளதாகக் கூறப்படும் இச் சம்பவம் தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவைஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக உள்துறைச் செயலாளர் நரேஷ் குப்தா நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

வாணியம்பாடி போலீஸ் நிலையத்தில் பெண்களை போலீசாரே கற்பழித்ததாக வந்த புகாரையடுத்து சிபிசிஐடிபோலீஸ் விசாரணைக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

தற்போது விசாரணையின் முதல் கட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அந்தப்போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து முதல்வர்உத்தரவிட்டுள்ளார்.

கடமையிலிருந்து தவறியதற்காகவும், அப்பாவிகள் மீது பொய்யான வழக்குகளைப் போட்டதற்காகவும் இந்தநடவடிக்கையை முதல்வர் எடுத்துள்ளார். மேலும், அப்பாவிகள் மீது போடப்பட்டுள்ள பொய்யான வழக்குகளைஉடனடியாக வாபஸ் பெறவும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக நரேஷ் குப்தா கூறியுள்ளார்.

இதன் மூலம் வாணியம்பாடி போலீஸ் நிலையத்தில் பெண்கள் கற்பழிக்கப்பட்டது நிரூபணமாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+