ஒரே டிராக்கில் எதிரெதிரே வந்த 2 ரயில்கள்: மாபெரும் விபத்து தவிர்ப்பு
ஈரோடு:
சரக்கு ரயில் சென்று கொண்டிருந்த தண்டவாளத்தில் எதிர்திசையில் பெங்களூர்- தூத்துக்குடி ரயிலும் தவறுதலாகவந்தது. இரு ரயில்களின் டிரைவர்களின் சமயோஜிதத்தால் இரு ரயில்களும் நிறுத்தப்பட்டன. இதனால் மாபெரும்ரயில் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு 9.50 மணிக்கு பெங்களூரில் இருந்து தூத்துக்குடிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுச் சென்றது.
நள்ளிரவு 3 மணிக்கு இந்த ரயில் ஈரோடு சென்றடந்ைதது. இங்கு ரயிலின் மின்சார என்ஜின் கழற்றப்பட்டு டீசன்என்ஜின் பொறுத்தப்படும். நேற்றும் இந்தப் பணி நடந்தது.
என்ஜின் மாற்றப்பட்ட பின்னர் அந்த ரயில் மீண்டும் தூத்துக்குடியை நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. மிக பயங்கரவேகத்தில் இந்த ரயில் சென்று கொண்டிருந்தது.
அதிகாலை 4.30 மணிக்கு கரூர் ரயில் நிலையத்துக்கு சிறிது தொலைவு முன்னே உள்ள ஊஞ்சலூர் என்ற இடத்தில்ரயில் சென்று கொண்டிருந்தபோது அதே தண்டவாளத்தில் எதிர் திசையில் இருந்து ஒரு சரக்கு ரயில் படுவேகத்தில்வந்து கொண்டிருந்தது.
வளைவு ஏதும் இல்லாத அந்த இடத்தில் சரக்கு ரயில் வருவதை தொலைவிலேயே பயணிகளின் ரயிலின் டிரைவர்பார்த்துவிட்டார். அதே போல எதிரே பயணிகள் ரயில் வருவதை சரக்கு ரயிலின் டிரைவரும் பார்த்துவிட்டார்.
இருவரும் இரு டிரைவர்களுமே படு வேகமாகவும் சமயோஜிதத்துடனும் செயல்பட்டு அவசர பிரேக்குகளைஇயக்கினர். இரு ரயில்களும் மிக வேகமாகச் சென்று கொண்டிருந்ததால் அவை பிரேக்குகளையும் மீறி ஒன்றைஒன்று நெருங்கின.
இரு ரயில் என்ஜின்களுக்கும் இடையே வெறும் 25 மீட்டர் தூரம் மட்டுமே இருந்த நிலையில் இரு ரயில்களும்நின்றன. இதனால் நேருக்கு நேர் மோதவிருந்த ரயில்களின் மாபெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சடன் பிரேக் போடப்பட்டதால் அதிர்ந்து போன பயணிகள் அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்தனர். பலபயணிகளும் மேல் பெர்த்துகளில் இருந்து கீழே விழுந்தனர்.
இரு ரயில்களின் டிரைவர்களில் ஒருவர் பிரேக் போட்டு ரயிலை நிறுத்தாமல் போயிருந்தாலும் நேருக்கு நேர் மோதிபயங்கரமான விபத்து ஏற்பட்டிருக்கும். நூற்றுக்கணக்கான உயிர்களும் பலியாக நேர்ந்திருக்கும்.
இதையடுத்து பெங்களூர்-தூத்துக்குடி ரயிலின் டிரைவர் மெதுவாக மீண்டும் ஊஞ்சலூருக்கே பின் பக்கமாக அந்தரயிலைக் கொண்டு வந்து சேர்த்தார்.
சரக்கு ரயில் அந்த இடத்திலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. வேறு ஏதும் ரயில் வந்துவிடாமல் தடுக்க சரக்கு ரயிலின்டிரைவர் தான் வந்த தண்டவாளத்திலேயே பின் பக்கமாக ஓடி பக்கத்து ஸ்டேசனை அடைந்து அவர்களைஎச்சரிக்கை செய்தார்.
பெங்களூர்-தூத்துக்குடி ரயிலின் பாதையை மாற்றிவிட வேண்டிய பணியில் ஈடுபட்டிருந்த பாயிண்ட்ஸ் மேனின்தவறு தான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
உரிய நேரத்தில் இரு ரயில்களின் டிரைவர்களுமே புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு ரயில்களை நிறுத்தியதால்,பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
ஊஞ்சலூரை அடைந்த பெங்களூர்-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் அங்கேயே 3 மணி நேரம் நிறுத்தப்பட்டது. கரூர்மற்றும் ஈரோட்டில் உள்ள அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து விசாரணை நடத்தியபின்னர் வேறு ஒரு டிரைவரைக் கொண்டு இந்த ரயிலை இயக்கச் செய்தனர். இதனால் 3 மணி நேரம் தாமதமாகஇந்த ரயில் புறப்பட்டுச் சென்றது.
தூத்துக்குடி ரயிலின் டிரைவரை மேற்கொண்டு ஓட்ட விடாமல் அதிகாரிகள் தடுத்ததன் மூலம் தவறு அவர் மீது தான்இருக்கும் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆனால், பெங்களூர்-தூத்துக்குடி ரயிலின் பாதையை மாற்றிவிடவேண்டிய பணியில் ஈடுபட்டிருந்த பாயிண்ட்ஸ் மேனின் தவறு தான் இதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக உயர் மட்ட விசாரணைக்கு தென்னக ரயில்வே உத்தரவிட்டுள்ளது. பாலக்காடு மண்டலத்தைச்சேர்ந்த உயர் அதிகாரி விசாரணையை ஆரம்பித்துள்ளார். விசாரணையில் தான் உண்மையான தவறு குறித்துத்தெரியவரும்.
சரக்கு ரயில் திண்டுக்கல்லில் இருந்து ஈரோட்டுக்கு வந்து கொண்டிருந்தது.












Click it and Unblock the Notifications