"ரிங் மாஸ்டர்" ஜெயலலிதாவுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிகாரிகளுக்கு பணியில் கவனம் குறைந்து விட்டதால், அவர்களை சாட்டையால் அடித்து வேலை வாங்கிவருகிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்கூறப்பட்டுள்ளதாவது:

ஜனநாயக நாட்டில் ஜனநாயக முறைகளை பின்பற்றாமல் அராஜகத்தை ஜெயலலிதா கையாண்டு வருகிறார்.

அதிகாரிகளுக்கு பணியில் கவனம் குறைந்து விட்டதால், சர்க்கஸ் ரிங் மாஸ்டர் போல் சாட்டையால் அடித்து வேலைவாங்கினேன் என்று ஜெயலலிதா சட்டசபையிலேயே கூறியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தொழிலாளர்களின் உரிமைகளை நிறைவேற்றாமல் அவர்களை அடக்கி ஆள நினைக்கிறார் ஜெயலலிதா.

வேலை நிறுத்த தடை சட்டத்தின் மூலம் அவர் ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்க முயற்சித்துள்ளார். இந்தச்சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். தவறினால், இந்தச் சட்டத்தைப் போராட்டத்தின் மூலமே தொழிலாளர்கள்வாபஸ் பெற வைப்பார்கள் என்று அத்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+