நான் யாரையும் கற்பழிக்கவில்லை: தேவாரம் சாட்சியம்
பெங்களூர்:
அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட பெண்ணை நான் கற்பழித்ததாகக் கூறப்படுவது பொய் என்றுசதாசிவம் கமிஷன் முன் தமிழக அதிரடிப் படையின் தலைவரான தேவாரம் கூறினார்.
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மலைப்பகுதியில் உள்ள பழங்குடியினப்பெண்களிடம் அதிரடிப் படையினர் அத்துமீறி நடந்து கொண்டதாகப் புகார் கூறப்பட்டது.
இதையடுத்து ஓய்பு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியான சதாசிவம் தலைமையிலான கமிஷன் கடந்த சிலமாதங்களாக மாதேஸ்வரன் மலையில் விசாரணை நடத்தியது.
அதன் தொடர்ச்சியாக பெங்களூரிலும் நீதிபதி சதாசிவம் கமிஷன் விசாரணையைத் தொடங்கியுள்ளது. அப்போதுதமிழக அதிரடிப் படையின் தலைவரான தேவாரம் நீதிபதி சதாசிவம் முன் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:
கடந்த 1993ம் ஆண்டு தமிழக அதிரடிப் படை அமைக்கப்பட்டது. அந்த ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி முதல் 1997ம்ஆண்டு ஜூலை 30ம் தேதி வரை நான் அதிரடிப் படைத் தலைவராகப் பணியாற்றினேன்.
ஹசனூர், கடம்பூர், தாமரக்கெரே, பண்ணாரி மற்றும் மேட்டூர் ஆகிய ஊர்களில் அதிரடிப் படை முகாம்கள்அமைக்கப்பட்டிருந்தன. மேட்டூரில் ஒரு பள்ளிக் கட்டடத்தைத்தான் அதிரடிப் படையினர் ஒரு ஸ்டோர் ரூமாகப்பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் அந்த ஸ்டோர் ரூமுக்குள் பெண்களை அழைத்து வந்து அத்துமீறி நடந்து கொண்டது பற்றி எனக்கு எதுவும்தெரியாது. அந்தக் குற்றச்சாட்டுக்கள் அத்தனையும் பொய்.
மேலும் அங்கு பெண்கள் அத்துமீறி நடத்தப்பட்டது குறித்து எனக்கும் எந்தவிதமான புகாரும் வரவில்லை. கிராமமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அதிரடிப் படையினருக்கு நல்ல பயிற்சியும்அளிக்கப்பட்டிருந்தது.
தங்கம்மாள் என்ற பெண்ணை நான் கற்பழித்ததாகப் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பெண்ணை நான்பார்த்ததே இல்லை.
என்னைப் போன்ற பெரிய அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தினால் நிறைய நிதி உதவி கிடைக்கும் என்பதற்காக அவர்என் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாகத் தெரிகிறது.
மேலும் நான் தங்கம்மாளைச் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டேன் என்ற புகாரும் பொய்யானது என்றார் தேவாரம்.
இதன் பிறகு மேலும் சில போலீஸ் அதிகாரிகளிடம் நீதிபதி சதாசிவம் விசாரணை நடத்தினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications