ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பெற்ற திண்டுக்கல் மாணவர்
சென்னை:
திண்டுக்கல் அருகே உள்ள சி.சி.சி. குவாரி என்னும் குக்கிராமத்தைச் சேர்ந்த செந்தில்பாண்டியன் என்ற வேளாண்மாணவர் ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழக அளவில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுள்ளார்.
2001ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் பி.எஸ்சி. வேளாண்மைப்பட்டதாரியான 24 வயதாகும் செந்தில்பாண்டியனுக்கு அகில இந்திய அளவில் 82வது இடம் கிடைத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவில் உள்ள குவாரி ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் 5ம் வகுப்பு வரைபடித்தார் செந்தில்பாண்டியன். இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர்தான் இவருடைய தந்தை தர்மாராஜு.அவருடைய தாய் ருக்மணி சத்துணவு ஊழியராக உள்ளார்.
பின்னர் ராணி மெய்யம்மை பள்ளியில் 10ம் வகுப்பு முடித்த அவர் திருச்சி ஈ.ஆர். மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூமுடித்தார்.
பிளஸ் டூ முடித்தவுடனேயே எம்.பி.பி.எஸ். சேர வேண்டும் என்பதற்காகக் கடுமையாக உழைத்தார். ஆனால்அதற்கு சீட் கிடைக்காததைத் தொடர்ந்து மதுரை வேளாண் கல்லூரியில் சேர்ந்தார்.
கடந்த 1999 மற்றும் 2000ம் ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ். தேர்வுகளை எழுதினார். ஆனால் இரண்டு முறையும் தேர்ச்சிபெறவில்லை.
தற்போது மூன்றாவது முறையாக 2001ல் அவர் எழுதிய ஐ.ஏ.எஸ். தேர்வில் அவருக்குப் பலன் கிடைத்து விட்டது.
செந்தில்பாண்டியன் கடந்த 2000ம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி. - குரூப் 1 தேர்வெழுதி டி.எஸ்.பியாக ஆகியுள்ளார்என்பதும் பிளஸ் டூ வரை தமிழ் மீடியம்தான் படித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இடைவிடாத முயற்சி, கடினமான உழைப்பு, தன்னம்பிக்கை, தோல்விகளைக் கண்டு சோர்ந்து விடாமல் இருப்பதுஆகியவைதான் தன்னுடைய ஐ.ஏ.எஸ். வெற்றியின் ரகசியம் என்கிறார் செந்தில்பாண்டியன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications