விழுப்புரம் நீதிமன்ற வளாகத்தில் பெண் கற்பழித்துக் கொலை
விழுப்புரம்:
விழுப்புரம் நீதிமன்ற வளாகத்தில் குப்பை கூட்டும் பெண் ஒருவர் அந்த வளாகத்திலேயே கொடூரமாகக் கற்பழித்துக்கொலை செய்யப்பட்டார்.
விழுப்புரத்தைச் சேர்ந்த மாரியம்மாள் (34) அங்குள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் குப்பை கூட்டும் பணியைத்தானாகவே செய்து வந்தார். நீதிமன்றத்திற்கு வருபவர்கள் தரும் சொற்பப் பணத்தில் தன் வாழ்க்கையை நடத்திவந்தார்.
இவருக்கு உற்றார், உறவினர், குடும்பத்தினர் என்று யாரும் கிடையாது என்பதால் நீதிமன்ற வளாகத்திலேயே ஒருஓரமாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவிலும் நீதிமன்ற வளாகத்தில்தான் இவர் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது குடிபோதையில் வந்த ஒரு கும்பல் மாரியம்மாளை மாறி மாறிக் கற்பழித்தனர். இதில் அவர் கதறிக் கதறிஅழுது மயங்கிச் சரிந்தார். இதையடுத்து அவரைக் கற்பழித்தவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
மறுநாள் காலையில் அப்பகுதி வழியாக வந்தவர்கள் மாரியம்மாள் கிடந்த அலங்கோல நிலையைக் கண்டுபதறிப்போய் போலீசாரிடம் தகவல் கொடுத்தனர்.
போலீசார் விரைந்து வந்து மாரியம்மாளை விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத்தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் மாரியம்மாள் நேற்று பகலில் உயிரிழந்தார். மாரியம்மாளைக்கற்பழித்தவர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
நீதிமன்ற வளாகத்திலேயே ஒரு பெண் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது விழுப்புரம் மக்களிடையேபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications