3 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் ஏன்? - செங்கை சிவம் விளக்கம்
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
திமுக தலைவர் கருணாநிதி கூறியதால் தான் மூன்று தொகுதிகளிலும் மனுதாக்கல் செய்தேன் என்று செங்கை சிவம்கூறினார்.
வேலூரில் நிருபர்களிடம் இது பற்றி கூறியதாவது :-
கருணாநிதி கூறியதால் தான் நான் மூன்று தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்தேன்.
இதில் இரண்டாவதாக மனுதாக்கல் செய்த வாணியம்பாடி தொகுதியில் என் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.அச்சிறுபாக்கத்தில் என்னுடைய வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.
பின்னர் கருணாநிதி கேட்டுக் கொண்டதற்கிணங்கவே சைதாப்பேட்டையிலும் வாணியம்பாடியிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட என்னுடைய மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டேன்.
திமுக சார்பில் பிரச்சாரத்துக்கு செல்ல முடிவு செய்துள்ளேன் என்றார் செங்கை சிவம்.












Click it and Unblock the Notifications