தமாகா இணைந்தாலும் இளங்கோவனே தலைவர்?
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை இளங்கோவனிடமிருந்து பறித்துக் கொள்ள விருப்பமில்லை என்று தமாகாதலைவர் வாசன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் தெரிவித்து விட்டதாகக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியுடன் மீண்டும் இணைவதற்காக அக்கட்சியின் தமிழக தலைவர் பதவியிலிருந்து சட்டசபைகாங்கிரஸ் தலைவர் பதவி வரை நிறைய பதவிகளை தமாகாவினர் எதிர்பார்த்தனர்.
இணைப்பு தொடர்பாகப் பேச்சு நடத்த டெல்லியிலிருந்து காங்கிரஸ் பொதுச் செயலாளரான ரமேஷ் சென்னிதாலாஒவ்வொரு முறை வரும்போதும், தமாகா சார்பில் வாசன் இதைத் தவறாமல் வலியுறுத்தி வந்தார்.
இவ்வளவு பதவிகளை தமாகாவினர் கேட்கிறார்களே என்று காங்கிரஸ் தரப்பு அதிர்ச்சியடைந்தாலும், அவர்களுக்குஇப்போதைய முக்கியத் தேவை காங்கிரசுடன் தமாகா இணைய வேண்டும் என்பதுதான். இதனால்டெல்லியிலிருந்து வரும் காங்கிரஸ் பிரமுகர்களும் சுமூகமாகவே பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டுள்ளனர்.
கடந்த திங்கள்கிழமை சென்னிதாலாவும், ஆஸ்கர் பெர்னாண்டசும் வந்து இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைகளைநடத்தினர். இதையடுத்து மறுநாளே டெல்லி சென்றார் வாசன். அங்கு சோனியா காந்தியுடன் அவர் பேசிய பிறகேஇணைப்பு தேதி பற்றி அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை சோனியாவை சந்தித்து வாசன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தபேச்சுவார்த்தையில், தமிழக காங்கிரஸ் தலைவராக இளங்கோவனே நீடிப்பதில் எனக்கு ஆட்சேபனை ஏதும்இல்லை. ஆனால் சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவியை மட்டும் தமாகாவுக்கு விட்டுத்தர வேண்டும் போன்ற சிலகோரிக்கைகளை சோனியா முன் வைத்துள்ளார். இது குறித்து பரிசீலிப்பதாக சோனியாவும் கூறிவிட்டார்.
வாசனுக்கு அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியை வழங்க சோனியா திட்டமிட்டுள்ளதாகவும்காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
சென்னிதாலா கோவாவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை தீர்த்து வைக்க சென்றுள்ளார். நாளை அவர்டெல்லி திரும்பிய பின்னர் அவரையும் சந்தித்து பேசிவிட்டு சென்னை திரும்பவுள்ளார் வாசன்.
அப்போது இணைப்பு தேதி குறித்து அவர் தெரிவிப்பார் என்று தெரிகிறது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications