குழந்தையின் வாயில் மதுவை ஊற்றி வரதட்சணை கொடுமை
சென்னை :
ஒன்றரை வயது பெண் குழந்தையின் வாயில் மதுவை ஊற்றி பெண்ணிடம் வரதட்சணை கேட்டு மிரட்டியவரையும்அதற்கு உடந்தையாக இருந்த தாயையும் போலீசார் கைது செய்தனர்.
சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த பிஜூநாயர் (34) என்பவருக்கும் தர்மபுரியைச் சேர்ந்த நிஷாகுமாரி (22)என்பவருக்கும் கடந்த 2000ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடந்தது.
திருமணத்தின் போது நிஷாகுமாரியின் பெற்றோர் பிஜூநாயருக்கு 2 லட்ச ரூபாய் பணமும், 40 பவுன் நகையும்வரதட்சணையாகக் கொடுத்தனர். இவர்களுக்குத் தற்போது ஒன்றரை வயதில் தேவிகா என்றொரு மகளும் உண்டு.
நிஷாகுமாரி தருமபுரி மாவட்டம், குறிஞ்சிப்பட்டியில் ஆசிரியராக பணிபுரிகிறார். திருமணத்திற்குப் பிறகு 2ஆண்டுகளாக பிஜூநாயர் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே உண்டு உறங்கி வந்தார்.
இந்த லட்சணத்தில் கொடுத்த வரதட்சணை போதாதென்று, நிஷாகுமாரியிடம் மேலும் வரதட்சணை கேட்டுகொடுமைப் படுத்தியுள்ளார்.
சமீபத்தில் பிஜூநாயரின் கொடுமை உச்சகட்டத்தை அடைந்தது. தன்னுடைய ஒரே மகளின் வாயில் பிராந்தியைஊற்றி நிஷாகுமாரியிடம் வரதட்சணை கேட்டு மிரட்டியுள்ளார். வரதட்சணை தராவிட்டால் இருவரையும் கொன்றுவிடப் போவதாகவும் பிஜூநாயர் மிரட்டினார்.
இந்நிலையில் மற்றொரு அதிர்ச்சியும் நிஷாகுமாரிக்குத் தெரியவந்தது. பிஜூநாயருக்கு ஏற்கனவே திருமணம்ஆகிவிட்டது என்ற விஷயத்தை அவரும் அவருடைய தாயாரும் நிஷாகுமாரியின் குடும்பத்தினரிடம்மறைத்திருந்தனர்.
இதனால் மிகவும் கொதிப்படைந்த நிஷாகுமாரி உடனடியாக நீலாங்கரையில் உள்ள மகளிர் காவல் நிலையத்திற்குச்சென்று அவர்களைப் பற்றி புகார் கொடுத்தார்.
நிஷாகுமாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் பிஜூநாயரையும் அவருடைய தாய் விஜயலெட்சுமியையும்போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications