கும்ப்ளே தாடையில் ஆபரேஷன்: குணமாகி வருகிறார்
பெங்களூர்:
மேற்கு இந்தியத் தீவுகளில் ஆடிக் கொண்டிருந்தபோது, தாடையில் அடிபட்ட இந்திய சுழற்பந்து வீச்சாளர் அனில்கும்ப்ளேக்கு நேற்று பெங்களூரில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தற்போது வேகமாகக்குணமடைந்து வருகிறார்.
இந்திய-மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையே கடந்த வாரம் நடந்த டெஸ்ட் பந்தயத்தின்போது, எதிரணிப்பந்து வீச்சாளர் மெர்வின் டில்லோன் வீசிய பந்து கும்ப்ளேயின் தாடையைப் பயங்கரமாகத் தாக்கியது.
இதனால் தாடையில் படுகாயமடைந்த போதிலும் அடுத்த இன்னிங்சில் 14 ஓவர்கள் வரை பந்து வீசிய கும்ப்ளே,மேற்கு இந்தியத் தீவுகளின் முன்னணி பேட்ஸ்மேனாகிய பிரையன் லாராவின் விக்கெட்டைச் சாய்த்து இந்தியவீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சியை அளித்தார்.
ஆனாலும் கும்ப்ளே அடுத்த டெஸ்ட்டில் விளையாட முடியாது என்றும் உடனடியாக அவருக்கு அறுவைச் சிகிச்சைஅளிக்கப்பட வேண்டும் என்றும் கிரிக்கெட் குழுவைச் சேர்ந்த மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.
இதையடுத்து சமீபத்தில் பெங்களூர் வந்து சேர்ந்த கும்ப்ளேவுக்கு நேற்று இங்குள்ள மல்லய்யா மருத்துவமனையில்அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. பிரபல பல் மருத்துவரான டாக்டர் கிஷோர் நாயக் தலைமையில் சுமார் 45நிமிடங்களுக்கு இந்த அறுவைச் சிகிச்சை நடந்தது.
உள்பக்கமாக உடைந்து போன அவருடைய கீழ்த்தாடைப் பகுதியில் இரண்டு டைட்டானியம் தகடுகள் தற்போதுபொருத்தப்பட்டுள்ளன.
இதையடுத்து தற்போது தாடைக் காயத்திலிருந்து கும்ப்ளே வெகு வேகமாகக் குணமடைந்து வருகிறார். இன்னும்10 அல்லது 15 நாட்களில் அவர் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடலாம் என்றும் டாக்டர் கிஷோர்கூறிவிட்டார்.
இந்நிலையில் இன்று பகல் கும்ப்ளே மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்போதுநிருபர்களிடம் பேசிய கும்ப்ளே தான் வேகமாகக் குணமடைந்து வருவதாகவும் விரைவில் மீண்டும் இந்தியஅணியில் சேரப் போவதாகவும் தெரிவித்தார்.
இதற்காக அடுத்த வாரமே தன்னுடைய பயிற்சிகளை ஆரம்பிக்கப் போவதாகவும் கும்ப்ளே மகிழ்ச்சியுடன்தெரிவித்தார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications