சிவகங்கை அருகே மின்னல் தாக்கி 4 பேர் பலி
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
தமிழகம் முழுவதுமே நேற்று மாலை பரவலாக நல்ல மழை பெய்தது. சென்னையில் தொடங்கி கன்னியாகுமரிவரை அனைத்து இடங்களிலும் மழை பெய்து, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில் நேற்று மாலை சிவகங்கை மாவட்டத்திலும் இடி, மின்னலுடன் மழை பெய்தது. சுமார் இரண்டு மணிநேரத்திற்கும் மேல் இந்தக் கடும் மழை நீடித்தது.
அப்போது கூத்தங்குளம் கிராமத்தில் செங்கற்சூளையில் வேலை செய்து கொண்டிருந்த மூன்று பெண்களை மின்னல்தாக்கியதில் இரண்டு பேர் அந்த இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
அந்த செங்கற்சூளை முதலாளியின் மனைவி இதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் பூவந்தி அருகே மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் மின்னல்தாக்கியதில் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் நான்கு மாடுகளும் உடல் கருகி உயிரிழந்தன.
இதற்கிடையே மானாமதுரையில் மழைக்காக மரத்தடியில் ஒதுங்கிய 50 வயது முதியவரை மின்னல் தாக்கியதில்அவரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
சிவகங்கையில் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஆசிரியம் கல்வெட்டு கண்டெடுப்பு! வியந்து பார்த்த மக்கள் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications