எல்லையில் இந்தியா-பாக் துப்பாக்கிச் சண்டை: 2 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஜம்மூவில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதல் குறித்தும் தீவிரவாதத்தை ஒடுக்குவது குறித்தும் இன்றுநாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் தரவுள்ளது.

நேற்று இது தொடர்பாக ராணுவ கமாண்டர்கள், உளவுப் பிரிவு அதிகாரிகள், மத்திய எல்லைப் பாதுகாப்புப்படையினர், ஜம்மூ-காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லாவுடன் மத்திய உள்துறை அமைச்சர் அத்வானியும்பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசும் ஆலோசனை நடத்தினர்.

பிரதமரும் அத்வானி, பெர்னாண்டஸ் உள்ளிட்ட முக்கிய கேபினட் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

கடும் சண்டை:

இந் நிலையில் இன்று அதிகாலை 4 மணியில் இருந்து இந்திய-பாகிஸ்தான் எல்லையில் மிக பயங்கர துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது. எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவத்தினரும் கனரக துப்பாக்கிகளால் தாக்குல்நடத்தி வருகின்றனர்.

முதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தான் துப்பாக்கிச் சூட்டை ஆரம்பித்தனர். இதையடுத்தது இந்தியராணுவத்தினர் மிக பயங்கர பதிலடித் தாக்குதல் நடத்தி வருவதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த துப்பாக்கிச் சண்டையால் எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை காலிசெய்துவிட்டு பாதுகாப்பான பகுதிகளில் குடியேற ஆரம்பித்துள்ளனர். இவர்களை அதிகாரிகளே பாதுகாப்பானஇடங்களுக்கு அழைத்துச் சென்று வருகின்றனர்.

கதுவா, பூஞ்ச். ஜம்மூ மாவட்டங்களின் எல்லையில் இந்தச் சண்டை நடந்து வருகிறது.

இந்த துப்பாக்கிச் சண்டையில் அர்னியா பகுதியைச் சேர்ந்த ராம்பால் என்பரும் ரிங்கு குமார் என்ற சிறுவனும்பலியாயினர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.

நதி நீர் நிறுத்தப்படுமா?

ராணுவரீதியில் மட்டும் நடவடிக்கை எடுக்காமல் பாகிஸ்தானுக்கு தண்ணீர் கிடைக்காமல் செய்ய வேண்டும் என்றும்மத்திய அரசை பல அமைப்புகளும் வலியுறுத்த ஆரம்பித்துள்ளன. இந்தியாவிலிருந்து பாயும் இந்தஸ் நதியில்இருந்து தான் பாகிஸ்தானின் வட-கிழக்குப் பகுதிகளுக்கு நீர் கிடைத்து வருகிறது. இந்த நீரைப் பகிர்ந்து கொள்ளஇரு நாடுகளும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்தை கடாசிவிட்டு நதியில் நீர் செல்லாமல் தடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு யோசனைகூறப்பட்டுள்ளது.

அதே போல பாகிஸ்தானின் அணு குண்டு மிரட்டலை எல்லாம் ஒதுக்கிவிட்டு அவர்களை கடுமையாகத் தாக்கவேண்டும் என்று இந்திய விமானப் படையின் தளபதியாக இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற டி.ஒய். டிப்னிஸ்கூறியுள்ளார்.

அமெரிக்கா வலியுறுத்தல்:

எல்லையில் பனி உருக ஆரம்பித்துள்ள நிலையில் பாகிஸ்தானில் இருந்து அதிக அளவிலான தீவிரவாதிகள்காஷ்மீரில் நுழையக் காத்துக் கொண்டுள்ளனர். இதனைச் சுட்டிக் காட்டியுள்ள பரூக் அப்துல்லா, இனிபாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தைக்கே இடமில்லை. போர் ஒன்று தான் தீர்வுக்கு ஒரே வழி என்று மத்திய அரசிடம்வலியுறுத்தியுள்ளார்.

இந் நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் தீவிரவாதத்துக்கு எதிரான மத்திய அரசின் திட்டம் குறித்து பிரதமர்வாஜ்பாயும் அத்வானியும் விளக்கம் தரவுள்ளனர்.

இதற்கிடையே இந்தியாவும் பாகிஸ்தானும் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும் என அமெரிக்கா கோரிக்கைவிடுத்துள்ளது. முதலில் எல்லை தாண்டி தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் செல்வதை பாகிஸ்தான் தடுக்க வேண்டும்என்றும் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+