சிறப்புத் தமிழில் முதலிடம்: வறுமையால் உயர் கல்வி தடை
சென்னை:
சிறப்புத் தமிழ் பாடத்தில் 200க்கு 181 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளார்விஜயலட்சுமி என்ற ஏழை மாணவி.
குடிசை வீட்டில் வசித்து வரும் இந்த மாணவி வசதி இல்லாத காரணத்தால் மேற்கொண்டு படிக்க இயலாதநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள என்.கே.டி. நேஷனல் பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் படித்து வந்தார்விஜயலட்சுமி. சிறப்புத் தமிழில் முதலிடம் பெற்று தேறியுள்ளார்.
இவரது தந்தை பிளம்பராக வேலை பார்த்து வருகிறார். தினமும் அவருக்கு வேலை கிடைப்பதே அரிது என்பதால்மிக ஏழ்மை நிலையில் இருக்கிறது இக் குடும்பம்.
மேற்கொண்டு பி.ஏ. எகனாமிக்ஸ் படித்துவிட்டு பின்னர் டீச்சர் டிரைனிங் படிக்க விரும்பும் விஜய்லட்சுமிஎதிர்காலத்தில் தமிழ் ஆசிரியையாக விரும்புகிறார்.
இவரது தாயாருக்கும் சகோதரிக்கும் இவரை மேற்கொண்டு படிக்க வைக்க விருப்பம் இருந்தாலும் தனதுவருமானத்தை வைத்துக் கொண்டு விஜய்லட்சுமியை உயர் படிப்பு படிக்க வைக்க முடியாது என்று கூறிவிட்டார்தந்தை.
இதனால் வருத்தமும் கண்ணீருமாக உட்கார்ந்திருக்கிறார் இந்த மாணவி.
தமிழில் சிறப்பிடம் பெற்று தேறியுள்ள இந்த மாணவியின் உயர் கல்விக்கான செலவை அரசே ஏற்க வேண்டும்என்று அந்தப் பகுதியில் வசிக்கும் பிற குடிசை வாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
