தாழ்த்தப்பட்ட மாணவர்கள் வெற்றி பெறவில்லையே: கருணாநிதி வருத்தம்
சென்னை:
பிளஸ் டூ தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த 11 மாணவர்களுக்கும் திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்துத்தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த 11 இடங்களை ஒரு தாழ்த்தப்பட்ட மாணவர் கூட பிடிக்காதது கவலை தருவதாகவும் கருணாநிதிகூறியுள்ளார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக ஆட்சியில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. திமுக ஆட்சியில் கல்வித்துறைக்கு மட்டும் ரூ. 4,949கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், கடந்த அதிமுக ஆட்சியில் ரூ. 2,233 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. இதுகல்விக்கு அவர்கள் தந்த முக்கியத்துவத்தைத் தான் காட்டுகிறது.
ஆட்சியில் இருந்தபோது ஆண்டுதோறும் சராசரியாக கல்வித்துறைக்காக நான் ரூ. 534 கோடியை கூடுதலாகஒதுக்கினேன். ஆனால், இந்த அதிமுக ஆட்சி இந்த ஆண்டுக்கு வெறும் 10 கோடியை மட்டும் கூடுதலாக ஒதுக்கிகல்வியை அலட்சியப்படுத்தியுள்ளது.
அதே போல சாதிச் சான்றிதழ் போன்றவற்றை உடனே மாணவர்களுக்கு வழங்கும் திட்டத்தை திமுக ஆட்சியில்அறிமுகப்படுத்தினோம். இதனால், 15 லட்சம் மாணவர்கள் பலனடைந்தனர்.
தொழிற்கல்லூரிகளில் சேர கிராமப் புற மாணவர்களுக்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடு திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. ஆனால், ஜெயலலிதா ஆட்சியின் குளறுபடியால் இத் திட்டம் பரிதாப நிலையில் உள்ளது.
இப்போது முதலிடம் பெற்றுள்ள 11 மாணவர்களுக்கும் உயர் கல்விகக்கான செலவை அரசே ஏற்கப் போகிறது.இதற்குக் காரணம் திமுக தான். முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் 10ம் வகுப்பு 11ம் வகுப்பு மாணவர்களின்உயர் கல்விச் செலவை அரசே ஏற்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது திமுக தான் என்பதை நினைவூட்டவிரும்புகிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications