பிளஸ் டூ முடிவுகள்: மாணவர் தற்கொலை... 5 தற்கொலை முயற்சிகள்
சென்னை:
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டார். இவர்களைத் தவிர தான் பிளஸ் டூவில் வெற்றி பெற்ற செய்தியை நண்பர்களுக்குத் தெரிவிப்பதற்காகசைக்கிளில் சென்ற ஒரு மாணவர் லாரி மோதி உயிரிழந்தார்.
இவர்களைத் தவிர பாண்டிச்சேரியைச் சேர்ந்த 5 மாணவிகள் தோல்வி காரணமாகத் தற்கொலை முயற்சியில்ஈடுபட்டனர்.
சென்னை கோட்டூர்பூரம் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் நந்தகுமார். இவரது இருவரும் மகன்கள்சமீபத்தில் பிளஸ் டூ தேர்வு எழுதியிருந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான பிளஸ் டூ தேர்வு முடிவுகளின் போது மூத்த மகனான கோபிநாத்தோல்வியடைந்து விட்டார். ஆனால் அவருடைய தம்பி பாஸ் ஆகி விட்டார்.
தம்பி பாஸாகி தான் பெயிலாகி விட்டோமே என்று மனம் வருந்திய கோபிநாத் நொந்து போன நிலையில்அமைதியாக இருந்தார்.
இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை) மாலை அவரது குடும்பத்தினர் வெளியே சென்றிருந்தபோது வீட்டில் தனியாகஇருந்த கோபிநாத் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
காலையில் மகிழ்ச்சி இரவில் துக்கம்
இந்நிலையில் பாஸ் ஆன செய்தியை நண்பர்களிடம் சொல்வதற்காக சைக்கிளில் சென்ற பிளஸ் டூ மாணவன் லாரிமோதி பரிதாபமாக இறந்தார்.
தண்டையார் பேட்டை அம்மணி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீசன். பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சிபெற்றுள்ளார். தான் பாஸ் ஆன செய்தியை நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடுவதற்காக அப்பாவிடமிருந்துகொஞ்சம் பணம் வாங்கிக் கொண்டு சைக்கிளில் சென்றார் ஜெகதீசன்.
அப்போது எதிரே வந்த லாரி எமனாக ஜெகதீசனை சைக்கிளுடன் மோதிச் சாய்த்தது.
இரவு வரை ஜெகதீசன் வீடு திரும்பாதது குறித்து குழம்பிய பெற்றோர் அவரைத் தேடினர். அப்போதுதான் விபத்துகுறித்துத் தெரிய வந்தது.
காலையில் இனிப்புகள் வழங்கி சந்தோஷமாக இருந்த குடும்பத்தினர் இரவில் துக்கத்தில் கதறி அழுததுபரிதாபமாக இருந்தது.
விஷம் குடித்த 5 மாணவிகள்
இதற்கிடையே பாண்டிச்சேரி பகுதியில் பிளஸ் டூ தேர்வில் பெயிலான 5 மாணவிகள் விஷம் குடித்தனர்.
அனைவரும் புதுவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
சுசீலா, ரெட்ரோஸ், சத்யா, அம்பிகா, விஜி ஆகிய அந்த ஐந்து மாணவிகளும் பாண்டிச்சேரியின் பல்வேறுபகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications