2 எய்ட்ஸ் நோயாளிகள் தற்கொலை: மருத்துவ ஊழியர்கள் அலட்சியத்தால் மரத்தில் தொங்கிய பிணங்கள்
சென்னை:
சென்னை தாம்பரத்தில் உள்ள அரசு நெஞ்சக (டி.பி.) நோய் மருத்துவமனையில் ஒரே வாரத்தில் இரண்டு எய்ட்ஸ் நோயாளிகள் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தாம்பரத்தில் டி.பி. மருத்துவமனை உள்ளது. இங்கு எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 50க்கும் மேற்பட்டநோயாளிகள் இங்கு உள்ளனர். இவர்களில் பலருக்கும் குடும்பத்தினரின் ஆதரவு கிடையாது. சில நோயாளிகளை மட்டுமே அவர்களதுகுடும்பத்தினர் வந்து பார்த்து செல்வதுண்டு. ஆதரவற்ற பல நோயாளிகள் எப்போதும் சோகத்துடன், அழுதவாறு காணப்படுவர்.
இந்த நிலையில், கடந்த 12ம் தேதி கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பரமசிவம் என்ற லாரி டிரைவர் தனது நிலையை எண்ணி வருந்தி, தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் நீண்ட நேரம் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரத்திலேயே தொங்கிக்கொண்டிருந்தது.
காரணம், உடலை இறக்க மருத்துவமனை ஊழியர்கள் முன்வராதது தான். எய்ட்ஸ் நோயாளிகள் மீது அவர்கள் காட்டும் அலட்சியமேஇதற்குக் காரணம். தொட்டால் எய்ட்ஸ் வந்துவிடும் என்று மருத்துவமனை ஊழியர்களே தவறாக நினைத்து வருகின்றனர். நம் ஊர்மருத்துவமனை ஊழியர்கள் எந்த அளவுக்கு விவரம் இல்லாமல் உள்ளனர் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
இந்த சோகச் சம்பவம் மறப்பதற்குள், திருவண்ணாமலையைச் சேர்ந்த ஜனார்த்தனம் என்ற வாலிபர் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார். இவரும் மரத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இவர் பட்டதாரி வாலிபர். பிகாம் படித்துள்ளார். இவரதுஉடலையும் இறக்க ஊழியர்கள் முன்வரவில்லை.
அடுத்தடுத்து 2 தற்கொலைகளால் நெஞ்சக நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எய்ட்ஸ் நோயாளிகள் இதயம் கனத்துப்போய் காணப்படுகின்றனர்.












Click it and Unblock the Notifications