பள்ளியின் அலட்சியத்தால் 37 பிளஸ் டூ மாணவர்கள் பெயில்
சென்னை:
சென்னை அருகே உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் டூ தேர்வு எழுதிய 37 மாணவர்கள் உயிரியல் பாடத்தில் ஒட்டுமொத்தமாகதோல்வியுற்றுள்ளனர்.
மாணவர்களின் செய்முறை தேர்வுக்கான (பிராட்டிகல்) மதிப்பெண் பட்டியலை பள்ளி நிர்வாகம் உரிய முறையில் அனுப்பாத காரணத்தால்தான் அவர்கள் பெயிலாகி உள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னை வேளச்சேரி அருகே உள்ளது பள்ளிக்கரணை. இங்கு அரசு ஆடவர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி சமீபத்தில்தான்உயர்நிலைப் பள்ளி அந்தஸ்திலிருந்து மேல் நிலைப் பள்ளியாக உயர்ந்தது.
சமீபத்தில் வெளியான தேர்வு முடிவுகளைப் பார்த்த பிளஸ் டூ பயாலஜி மாணவர்கள் 37 பேர் பேரதிர்ச்சி அடைந்தனர்.
உயிரியில் பாடத்தில் மட்டும் அனைவரும் பெயிலாகி இருந்தனர். அதிர்ந்து போன மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தைஅணுகியபோது, நாங்கள் என்ன செய்வது என்று கூறி விட்டனர்.
இதையடுத்து மாவட்டக் கல்வி நிர்வாகத்தை மாணவர்களும் பெற்றோர்களும் அணுகினர். அப்போது தான் பள்ளியின் தவறு தெரியவந்தது.பள்ளி நிவாகம் உயிரியல் பாடத்திற்கான செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை கல்வித்துறைக்கு உரிய முறையில் அனுப்பாமல்அலட்சியமாக இருந்துள்ளது என்று பெற்றோர்கள் கூறுகின்றனர்.
ஆனால், இதை பள்ளியின் தலைமை ஆசிரியர் மறுத்துள்ளார். மீண்டும் ஒருமுறை இந்த மதிப்பெண் பட்டியல் அனுபப்பட்டுள்ளதாக அவர்கூறியுள்ளார்.
37 மாணவர்களும் நன்றாக படிப்பவர்கள் என்று அவர்கள் பெற்ற பிற பாடங்களுக்கான மதிப்பெண்களே கூறுகின்றன.
சமீபத்தில் இந்த பள்ளி மேல்நிலைப் பள்ளி அந்தஸ்தைப் பெற்றதால் நிர்வாகரீதியிலான குழப்பங்கள் ஏற்பட்டுளள்ளதாகவும் அதன்காரணமாகவே இந்தக் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இப்போது இந்த மாணவர்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் நிற்கின்றனர்.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications