எல்லையில் லட்சக்கணக்கில் கண்ணிவெடிகள் புதைப்பு
நியூயார்க்:
எல்லைப் பகுதியில் இந்தியாவும் பாகிஸ்தானும் லட்சக்கணக்கான கண்ணிவெடிகளை புதைத்து வருவதாக சர்வதேசமனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.
இரு நாடுகளும் போரை நோக்கி முன்னேறி வரும் நிலையில் எதிரி நாட்டுப் படையினர் உள்ளே நுழைந்துவிடாமல்தடுக்க ஆயிரக்கணக்கான மைல் நீளம் கொண்ட எல்லை முழுவதும் கண்ணி வெடிகளை புதைத்து வருகின்றன.
இந்தக் கண்ணிவெடிகளால் எதிர்காலத்தில் பெரும் உயிரிழப்புகள் நேரிடலாம் என சர்வதேச மனித உரிமைஅமைப்பு கூறியுள்ளது.
ஏற்கனவே 1997ம் ஆண்டிலிருந்து லட்சக்கணக்கான கண்ணிவெடிகள் எல்லையோரத்தில் புதைக்கப்பட்டுள்ளன.இப்போது மேலும் புதைக்கப்பட்டு வருகின்றன.
மனிதர்களைக் கொல்லும் கண்ணிவெடிகள், வாகனங்களைத் தகர்க்கும் கண்ணிவெடிகள் என அனைத்துவகையான குண்டுகளும் புதைக்கப்பட்டுள்ளன. இதில் அப்பாவிகளும் சிக்கி பலியாகலாம்.
உலகில் மிகப் பெரிய அளவில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக இந்திய-பாகிஸ்தானியஎல்லை மாறியுள்ளது என்று அந்த கவலை தெரிவித்துள்ளது.
நஷ்டஈடு தரும் இந்திய ராணுவம்:
ராஜஸ்தான் உள்பட எல்லையோர மாநிலங்கள் முழுவதும் இந்தக் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன.ராஜஸ்தானில் லட்சக்கணக்கான விவசாய நிலங்களில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன.
இதனால், விவசாயிகள் தங்கள் நிலத்தில் கால் வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவசாயிளுக்கு முழுநஷ்ட ஈட தரப்படும் என ராணுவம் அறிவித்துள்ளது. ஏற்கனவே, 25 சதவீத நஷ்டஈட்டைத் தந்துவிட்டது.
ராஜஸ்தான் வீரர்களுக்கு குடிநீர்:
வழக்கமாகவே 40 டிகிரி வெப்ப நிலைக்கு மேல் நிலவும் ராஜஸ்தானில் இம்முறை கடும் கோடை வாட்டி வருவதால்மாநிலம் முழுவதும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இப்போது அங்கு 46 டிகிரி வெப்பம் நிலவுகிறது.
இந் நிலையில் பாகிஸ்தானையொட்டிய பாலைவன எல்லையில் லட்சக்கணக்கான இந்திய வீரர்கள்குவிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு போதிய குடிநீர் வசதி செய்து தர அம் மாநில அரசு தீவிர நடவடிக்கைகள்எடுத்து வருகிறது.
மாநில அதிகாரிகளுடன் எல்லைப் பகுதி மாவட்டங்களைப் பார்வையிட்ட அம் மாநில காங்கிரஸ் முதல்வர் அசோக்கெலோட் வீரர்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்கச் செய்ய உத்தரவிட்டார்.
வீரர்கள் நீண்ட நாட்களாக இந்த கொடும் வெயிலில் நிறுத்தப்பட்டுள்ளனர். இது மிக சிரமமான பணியாகும்.அவர்களுக்கு தண்ணீர் இல்லாமல் சிரமம் ஏற்பட்டுவிடாமல் தடுப்போம்.
அதிக அளவிலான குடிநீர் லாரிகளைப் பயன்படுத்தி நீர் வழங்கப்படும். இந்த மாவட்டங்களில் கூடுதலாகபோரிங்குகள் போடப்பட்டு வீரர்கள் இருக்கும் இடத்திலேயே நீரும் கிடைக்கச் செய்வோம்.
ரயில்வேயிடம் தண்ணீர் கொண்டு செல்லும் வாகன்களைக் கேட்டுள்ளோம். மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்துரயில்கள் மூலமும் தண்ணீர் கொண்டு வந்து தருவோம்.
கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலைஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு முழு நிவாரணம் தரவும் கடன்களை ரத்து செய்யவும் மத்திய அரசுடன் பேசுவேன்என்றார் அசோக் கெலோட்.
ராஜஸ்தானில் மட்டும் 1,300 கி.மீ. தூரத்துக்கு இந்திய-பாகிஸ்தான் எல்லை உள்ளது. இங்கு கடும் வெயலில்லட்சக்கணக்கான இந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications