இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்:
தீவிரவாதிகளை ஒழிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதாகவும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராகஇருப்பதாகவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
எல்லையில் இந்திய வீரர்களிடையே உரையாற்றிய பிரதமர் வாஜ்பாய் போருக்குத் தயாராகுமாறு ஆணையிட்டார்.வாஜ்பாய் உரையாற்றிய சிறிது நேரத்தில் பாகிஸ்தான் அரசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.வாஜ்பாயின் பேச்சு குறித்து தனது பாதுகாப்பு ஆலோசகர்கள், அமைச்சரவையின் கூட்டுக் கூட்டத்தில் விவாதித்தபாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் உத்தரவின்பேரில் இந்த அறிக்கை வெளியானது. அதன்விவரம்:
பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது. ஆனால், எங்கள் மீது தாக்குதல் நடந்தால் திருப்பித் தாக்குவோம்.
தீவிரவாதத்தை ஒழிக்க நாங்கள் முழு நடவடிக்கை எடுத்து வருகிறோம். தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம்.எங்களுடன் பேச்சு நடத்த இந்தியா முன் வர வேண்டும்.
காஷ்மீரின் பெயரைச் சொல்லிக் கொண்டு தீவிரவாதத்தில் ஈடுபட எந்த அமைப்புக்கும் பாகிஸ்தான் அனுமதி தராது.
அதே நேரததில் காஷ்மீர் மக்கள் தங்கள் எதிர்காலம் குறித்து முடிவெடுக்க எங்களது அரசியல், தூதரக ஆதரவுதொடரும்.
இவ்வாறு பாகிஸ்தான் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிரிட்டன் தூதரகம் காலியாகிறது:
இதற்கிடையே பாகிஸ்தானில் உள்ள பிரிட்டிஷாருக்குப் பாதுகாப்பில்லை என்று கூறி அந் நாடு தனது தூதரகஊழியர்கள் 150 பேரை திரும்ப அழைத்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பிரிட்டிஷாருக்கு தீவிரவாதிகளிடம் இருந்து தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்துகொணடிருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் கூறியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications