வீரர்களுடன் உணவு அருந்திய வாஜ்பாய்
ஜம்மூ:
பிரதமர் வாஜ்பாய் இன்று ஜம்மூவிலிருந்து ஸ்ரீநகர் வந்தார். அவர் குப்வாரா மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லையில்குவிக்கப்பட்டுள்ள ராணுவ வீரர்களைச் சந்தித்து அவர்களிடையே உரையாற்றினார்.
பின்னர் அங்குள்ள ராணுவ முகாமில் வீரர்களுடன் சேர்ந்து மதிய உணவு உண்டார்.
நேற்று காஷ்மீர் சென்ற அவர் இரவில் ஜம்மூ நகருக்குச் சென்றார். அங்கு கலூசக் ராணுவ முகாமில் தீவிரவாதிகள்தாக்குதலில் கொல்லப்பட்ட ராணுவத்தினரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இந்தத் தாக்குதலில் ராணுவ வீரர்களின் 10 குழந்தைகள், வீரர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 9 பெண்கள் உள்பட 4வீரர்களும் கொல்லப்பட்டனர். இந்தக் முகாமுக்குச் சென்று அக் குடும்பத்தினரை நேரில் சந்தித்து தனது ஆறுதல்தெரிவித்தார் வாஜ்பாய்.
அங்கிருந்து மருத்துவமனைக்குச் சென்ற வாஜ்பாய் அந்தத் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும்ராணுவ வீரர்களின் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்தார்.
இந் நிலையில் இன்று காலை சிறப்பு விமானத்தில் அவர் ஸ்ரீநகர் வந்தார். பகலில் குப்வாரா பகுதியின் எல்லையில்தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவத்தினரை நேரில் சந்தித்தார்.
நாளையும் ஸ்ரீநகரில் தங்கும் அவர் ராணுவத்தின் தாக்குதல் படையான 16, 17வது கார்ப்ஸ் படையின் தலைவர்கள்,முதல்வர் பரூக் அப்துல்லா, உளவுப் பிரிவு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இந் நிலையில் ஹூரியத் கான்பரசின் முக்கியத் தலைவரான அப்துல் கனி லோன் நேற்று தீவிரவாதிகளால்கொல்லப்பட்டதால் காஷ்மீரில் பதற்றம் நிலவி வருகிறது. மிதவாதத் தலைவரான அவரை பாகிஸ்தான்கொன்றிருக்கிறது. அவரது இறுதிச் சடங்கு இன்று நடக்கிது.
இவர் கொல்லப்பட்டதையடுத்து ஸ்ரீநகரில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவுஅமலாக்கப்படும் என்று கருதப்பட்டது. ஆனால், அப்படிப்பட்ட திட்டம் ஏதும் இல்லை என அரசு அறிவித்துள்ளது.
ஆனால், அம் மாநிலத்தில் நடந்து வரும் 12ம் வகுப்புத் தேர்வுகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
வாஜ்பாயின் வருகையை எதிர்த்து சில அமைப்புகள் பந்த் நடத்தவும் அழைப்பு விடுத்துள்ளன. இதையடுத்து அங்குமிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாஜ்பாய் வந்து, செல்லும் வழியில் ஒவ்வொரு 500 மீட்டர் தூரத்திலும் ஒரு ராணுவ சோதனைச் சாவடிஅமைக்கப்பட்டுள்ளது. வாஜ்பாய் பயன்படுத்தும் விமானத் தளத்திற்குச் செல்லும் அனைத்துப் பாதைகளும்மூடப்பட்டுவிட்டன.
பிரதமரின் வருகையையொட்டி காஷ்மீரில் முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அம் மாநிலபோலீஸ் ஐ.ஜி. கே.ராஜேந்திரன் நிருபர்களிடம் தெரிவித்தார்.
வாஜ்பாய் காஷ்மீரில் உள்ள நிலையில் முக்கிய அரசியல் தலைவரைக் கொன்று நிலைமையை மோசமாக்கியுள்ளதுபாகிஸ்தான்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications