இமாம் அலி விரைவில் பிடிபடுவான்: ஐ.ஜி. தகவல்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
போலீஸ் பிடியிலிருந்து தப்பியோடிய அல் உம்மா தீவிரவாதி இமாம் அலி குறித்த முக்கியத் துப்புகிடைத்திருப்பதாகவும் விரைவில் அவன் பிடிபடுவான் என்றும் தென் மண்டல காவல்துறை ஐ.ஜியான ராஜேந்திரன்கூறினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
இமாம் அலி மிகவும் புத்திசாலித்தனமாக இருக்கிறான். அவனைப் பிடிப்பது மிகப் பெரும் சவாலாகவே இருக்கிறது.
தூத்துக்குடியில் ஒருமுறை இமாம் அலி பதுங்கியிருந்த இடத்தை போலீசார் நெருங்கி விட்டனர். ஆனால் அதைத்தெரிந்து கொண்ட அவன் அங்கிருந்து தப்பியோடி விட்டான்.
தற்போது இமாம் அலி உள்ள இடம் குறித்த முக்கியத் துப்பு கிடைத்துள்ளது. எனவே விரைவில் அவன்பிடிபடுவான். இந்த முறை போலீசார் அவனைத் தப்ப விட மாட்டார்கள் என்று கூறினார் ராஜேந்திரன்.












Click it and Unblock the Notifications