டெல்லியில் பாதுகாப்புக் குழுவின் அவசரக் கூட்டம்
டெல்லி:
காஷ்மீரில் இருந்து இன்று மாலை பிரதமர் வாஜ்பாய் டெல்லி திரும்பியவுடன் பாதுகாப்புக் குழுவின் அவசரக்கூட்டம் கூடவுள்ளது.
வாஜ்பாய் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அத்வானி, பாதுகாப்புத்துறைஅமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், முப்படைத் தளபதிகள் மற்றும்ராணுவ உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இன்று மாலை 4.15 மணிக்கு ஸ்ரீநகரில் பத்திரிக்கை நிருபர்களைச் சந்தித்த வாஜ்பாய், எல்லையில் பதற்றம் நீடிக்கும்போதிலும் பாகிஸ்தானுடன் போர் தொடுப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவுதான் என்று குறிப்பாகஉணர்த்தியுள்ளார்.
ரூ.6,165 கோடிக்கு சிறப்பு பொருளாதாரத் திட்டங்களை அறிவித்த கையோடு இன்று மாலை டெல்லி திரும்புகிறார்.
அவர் டெல்லி வந்தவுடன் மத்திய அமைச்சரவையின் பாதுகாப்புக் குழு அவசரமாகக் கூடுகிறது.
நேற்று குப்வாராவில் ராணுவ வீரர்கள் மத்தியில் பேசியபோது எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராகநடவடிக்கை எடுப்பதற்கு சரியான நேரம் வந்துள்ளது என்றும் எந்தத் தியாகத்திற்கும் வீரர்கள் தயாராக இருக்கவேண்டும் என்றும் பேசினார்.
இந்நிலையில் இன்று காலை ஸ்ரீநகரில் மாநில உயர் மட்டப் பாதுகாப்புக் குழுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கியவாஜ்பாய், எல்லை நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்தக் குழுவின் தலைவரும் காஷ்மீர் முதல்வருமான பரூக் அப்துல்லா, அத்வானி, பெர்னாண்டஸ், ராணுவ தளபதிபத்மனாபன், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஒமர் அப்துல்லா, உள்துறை இணை அமைச்சர் ஐ.டி.சுவாமி, பாராமிலிட்டரி படை தலைவர்கள் உள்ளிட்ட 21 அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இன்று மாலை டெல்லியில் மத்திய அமைச்சரவைப் பாதுகாப்புக் குழுவைக் கூட்டியுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications