For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் பெண் டாக்டர் படுகொலை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை தியாகராய நகரில் பிரபல சித்த மருத்துவ பெண் டாக்டர் கொள்ளையர்களால் படுகொலைசெய்யப்பட்டார். கொல்லப்பட்ட டாக்டர் பிரபல தமிழறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதத்தின் உறவினர் என்பதுகுறிப்பிடத்தக்கது. சென்னையை பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது இந்த சம்பவம்.

தி.நகர் பாண்டி பஜார் பகுதியில் எஸ்.எஸ். ஆனந்தம் சித்த மருத்துவ அறக்கட்டளை மற்றும் மருத்துவமனைஉள்ளது. இந்த அறக்கட்டளையை டாக்டர் ஆனந்தகுமார் என்பவரும் அவரது தங்கை டாக்டர் மலர்க்கொடியும்நடத்தி வருகிறார்கள். இதில் ஐ.ஏ.எஸ். அதிகாரி குத்சியா காந்தி, கி.ஆ.பெ. விசுவநாதத்தின் மகள் மணிமேகலைக்கண்ணன் உள்ளிட்டவர்கள் காப்பாளர்களாக உள்ளனர்.

மருத்துவமனைக்குப் பின்புறம் டாக்டர் ஆனந்தகுமார், மலர்க்கொடி ஆகியோர் வசித்து வருகிறார்கள். மிகப்பிரபலமான இந்த மருத்துவமனையை இவர்கள் இருவரும்தான் நிர்வகித்து வந்தார்கள். எப்போது நோயாளிகள்வந்தாலும் முகம் சுளிக்காமல் பார்த்து அனுப்புவார்கள். சென்னையைத் தவிர வெளி மாவட்டங்களிலிருந்தும் கூடநோயாளிகள் இங்கு வந்து செல்வது உண்டு.

டாக்டர் ஆனந்தகுமார் சமீப காலமாக சர்க்கரை வியாதியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் படுக்கையில்இருந்தபடி சிகிச்சை பெற்று வந்தார். அவரைக் கவனிப்பதற்காக சசிகலா என்ற நர்ஸ் தினசரி காலையில் வந்து விட்டுஇரவில் சென்று விடுவார். இவர்களது மருத்துவமனை மற்றும் வீடு உள்ள வளாகத்தில் வாட்ச்மேன் கிடையாது. ஒருஅல்சேஷன் நாய் மட்டுமே உண்டு.

செவ்வாய்க்கிழமை இரவு நோயாளிகள் அனைவரும் வந்து சென்ற பின்னர் கேட்டை மூடுவதற்காக டாக்டர்மலர்க்கொடி கையில் சாவியுடன் வந்துள்ளார். அப்போது கேட் அருகே மறைந்திருந்த முகமூடி அணிந்திருந்த 3பேர் மலர்க்கொடியை மிரட்டியபடி உள்ளே நுழைந்தனர்.

பின்னர் அவரது வாயைப் பொத்தியவாறு வீட்டுக்கு உள்ளே கூட்டி வந்தனர். தங்கை மலர்க்கொடியை சிலர் கத்திமுனையில் கூட்டி வருவதைப் பார்த்த டாக்டர் அனந்தகுமார் படுக்கையில் இருந்து எழுந்திருக்க முயன்றார். ஆனால்அவரால் முடியவில்லை. இதையடுத்து எனது தங்கையை ஒன்றும் செய்து விடாதீர்கள். வீட்டிலுள்ள நகை, பணத்தைஎடுத்துக் கொள்ளுங்கள் என்று கெஞ்சினார்.

இந்த நிலையில் கொள்ளையர்களிடமிருந்து டாக்டர் மலர்க்கொடி திமிற முயன்றார். இதையடுத்து அவரதுதலையில் கொள்ளையர்கள் கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் மயக்கமடைந்த டாக்டர் மலர்க்கொடி சுருண்டுவிழுந்து இறந்தார்.

பின்னர் அவரை அப்படியே போட்டு விட்டு டாக்டர் அனந்தகுமாரை தூக்கிக் கொண்டு வீட்டில் எங்கெங்கு நகை,பணம் உள்ளது என்று கொள்ளையர்கள் கேட்டுள்ளனர். அவரும் உயிருக்குப் பயந்து கூறியுள்ளார். வீட்டிலிருந்தநகை, பணத்தை எல்லாம் எடுத்துக் கொண்ட கொள்ளையர்கள், டாக்டரை அப்படியே தரையில் போட்டு விட்டுதப்பிச் சென்று விட்டனர்.

அனந்தகுமாரால் எழுந்து சென்று மலர்க்கொடியைப் பார்க்க முடியவில்லை. வேதனையில் அழுதவாறே அவர்தரையில் கிடந்தார். புதன்கிழமை காலை 8 மணியளவில் சசிகலா டாக்டர் வீட்டுக்கு வந்துள்ளார். ஆனால் வாசல்கதவு, வீட்டுக் கதவு திறந்து கிடப்பதைப் பார்த்த அவர் ஏதோ விபரீதம் நடந்துள்ளதை உணர்ந்தார்.

இதையடுத்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது மலர்க்கொடி அடிபட்டுக் கிடப்பதையும், டாக்டர் அனந்தகுமார்முணகியவாறு கிடப்பதையும் பார்த்து பதறினார். உடனடியாக மணிமேகலைக் கண்ணனுக்குத் தகவல் கொடுத்தார்.அவர் ஒரு டாக்டருன் விரைந்து வந்தார்.

வீட்டுக்கு வந்த அவர் பதறியவாறு ஐ.ஏ.எஸ். அதிகாரி குத்சியா காந்திக்குத் தகவல் கொடுத்தார். அவர் உடனடியாகபோலீஸ் கமிஷனர் விஜயக்குமாருக்கு போன் செய்து விட்டு டாக்டரின் வீட்டுக்கு விரைந்தார். உயர் போலீஸ்அதிகாரிகளுடன் கமிஷனர் விஜயக்குமாரும் டாக்டரின் வீட்டுக்கு விரைந்து வந்தார்.

டாக்டர் மலர்க்கொடி பிணமாகிக் கிடப்பதைப் பார்த்த மணிமேகலைக் கண்ணன் கதறி அழுதார். அனைவரிடம்அன்புடன் நடந்து கொள்ளும் மலர்க்கொடிக்கு இந்த கதியா, இந்த நாட்டில் யாருமே நிம்மதியாக வாழ முடியாதா,இவருக்கே இந்த நிலையா என்று அவர் கதறினார். இந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா நேரடியாகத்தலையிட்டு கொள்ளையர்களைப் பிடிக்க உதவ வேண்டும் என்று அவர் கோரினார்.

சில நாட்களுக்கு முன்பே இந்த வீட்டில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. அப்போது 2 பேர் தொலைபேசிஇணைப்பைத் துண்டித்து விட்டு வீட்டுக்குள் நுழைய முயன்றுள்ளனர். வீட்டில் அப்போது ஆட்கள் நடமாட்டம்அதிகம் இருந்ததால் அவர்கள் தப்பி விட்டனர்.

இதுகுறித்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசாரும் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். இந்தநிலையில் செவ்வாய்க்கிழமை ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரமாகப் பார்த்து கொள்ளையர்கள் தங்களதுகைவரிசையைக் காட்டியுள்ளனர்.

பெண் டாக்டர் கொலை செய்யப்பட்டது சென்னை மாநகரம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒயின்ஷாப் அதிபர் வெட்டிக் கொலை

இதற்கிடையே சென்னை வியாசர்பாடி நகரில் ஒயின்ஷாப் வியாபாரம் நடத்தி வந்த பிலிப் (32) என்பவர்அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இவருக்கும் அதே பகுதியில் இன்னொரு கோஷ்டியைச் சேர்ந்தவர்களுக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

மார்க்கெட் அருகே 8 பேர் கொண்ட ரவுடி கும்பல், பைக்கில் வந்து கொண்டிருந்த பிலிப் மற்றும் அவரது நண்பர்ஜோஸ்வாவை வழிமறித்து, அவர்கள் மீது ஆஸிட் ஊற்றியுள்ளனர். அபாயத்தை உணர்ந்த பிலிப் பைக்கை ஓட்டமுயன்றுள்ளார். ஆனால் முடியவில்லை.

ரவுடிகும்பல் அவரை சுற்றி வளைத்து அரிவாளால் ரத்தம் சொட்ட சொட்ட வெட்டினர். அவரது நண்பருக்கும்அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் பிலிப் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார்.

மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் நடந்த இச்சம்பவம் வியாசர்பாடி மக்களிடையே பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X