இந்தியா வருகிறார் பிரிட்டன் வெளியுறவு அமைச்சர்
லண்டன்:
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் தற்போது பதற்றம் அதிகரித்துள்ள சூழ்நிலையில் இங்கிலாந்து வெளியுறவுத்துறைஅமைச்சரான ஜாக் ஸ்டிரா அடுத்த வாரம் இந்தியாவுக்கு வரவுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே எல்லையில் ஏற்பட்டுள்ள இந்தப் பதற்றம் மிகவும் கவலையளிப்பதாக உள்ளதாகலண்டனில் அவர் நிருபர்களிடம் கூறினார்.
எல்லை நிலைமையை உலக நாடுகள் தொடர்ந்து உற்றுக் கவனித்துக் கொண்டிருப்பதாகவும் கூறிய ஸ்டிரா, இதைஇப்படி விட முடியாது என்றும் அதை உலகம் ஏற்றுக் கொள்ளாது என்றும் கூறினார்.
அடுத்த வாரம் அவர் இந்தியா வரும் போதிலும் அவர் வரும் தேதி குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.
பாக்.கிலிருந்து 176 தூதர்கள் வாபஸ்:
இதற்கிடையே பாகிஸ்தானில் உள்ள வெளிநாட்டினருக்குத் தீவிரவாதிகள் மிரட்டல் இருந்து வருவதால்,அங்கிருந்து தன்னுடைய 176 தூதரக ஊழியர்களை இங்கிலாந்து வாபஸ் பெற்றுள்ளது.
இஸ்லாமாபாத்தில் உள்ள இங்கிலாந்து தூதரக அலுவலகத்தில் உள்ள 150 அதிகாரிகளும் கராச்சிஅலுவலகத்திலிருந்து 26 அதிகாரிகளும் உடனடியாக வாபஸ் பெறப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள ஏராளமான இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு தீவிரவாதிகளிடமிருந்து தொடர்ந்துமிரட்டல் வந்து கொண்டிருப்பதையடுத்தே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தூதரக அதிகாரி ஒருவர்தெரிவித்தார்.
ஆனாலும் தூதரக அதிகாரிகளைத் தவிர பாகிஸ்தானில் உள்ள மற்ற இங்கிலாந்து நாட்டினரை இன்னும்வெளியேறுமாறு கூறவில்லை என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். அவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று மட்டுமே இப்போதைக்குக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள இங்கிலாந்தின் விசா வழங்கும் அலுவலகங்களும் மூடப்பட்டு விட்டன.
ஏற்கனவே பாகிஸ்தானில் உள்ள பெரும்பாலான தூதரக அதிகாரிகளை அமெரிக்க அரசு வாபஸ் பெற்றுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் பிரிட்டிஷ் ராணுவத் தளபதி:
இந்நிலையில் இங்கிலாந்து ராணுவத் தளபதியான அட்மிரல் மைக்கேல் பாய்ஸ் இரண்டு நாள் பயணமாக இன்றுகாலை டெல்லி வந்து சேர்ந்தார்.
பாய்ஸின் இந்த இந்தியப் பயணம் வழக்கமான ஒன்றுதான் என்றாலும், அவரிடம் பாகிஸ்தான் தீவிரவாதிகளின்எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கான பல ஆதாராங்களை அவரிடம் இந்திய அதிகாரிகள் அளித்துள்ளதாகக்கூறப்படுகிறது.
கடந்த டிசம்பர் 13ம் தேதி இந்திய நாடாளுமன்றத் தாக்குதலுக்குப் பிறகு இங்கு வரும் முதல் வெளிநாட்டு ராணுவத்தளபதி பாய்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், இந்திய ராணுவத் தளபதி பத்மனாபன், கடற்படைத் தளபதிமத்வேந்திர சிங் மற்றும் விமானப்படை தளபதி கிருஷ்ணசாமி உள்பட பல ராணுவ அதிகாரிகளையும் பாய்ஸ்சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications