"பிரபாகரனை பிடிக்கும் தீர்மானத்தால் பேச்சு பாதிக்கும்"
சென்னை:
விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை இந்தியாவுக்குப் பிடித்துக் கொண்டு வரவேண்டும் என்று தமிழக அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானத்தால் இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளஅமைதிப் பேச்சுவார்த்தை பாதிக்கப்படலாம் என்று இலங்கை கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ரப் ஹக்கீம்கூறினார்.
சென்னையில் அவர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
பிரபாகரனைப் பிடித்து இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று ஏராளமான இந்தியக் கட்சிகள் தொடர்ந்துகோரி வருகின்றன.
மேலும் இது தொடர்பாக தமிழக அரசும் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இதனால் இலங்கையில் அடுத்த மாதம்நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தை பாதிக்கப்படலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்திய மக்களின் வேதனை எங்களுக்குப் புரிகிறது. ஆனால் அவர்களால் இதை மன்னிக்க முடியாமல் போகும்பட்சத்தில், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை மறக்கவாவது செய்யலாமே.
புலிகள் முழு மனதுடன் தான் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த முன் வந்துள்ளனர். எனவே புலிகளுக்கு எதிரானதடையை இலங்கை அரசு நீக்க வேண்டும் என்று தான் தனிப்பட்ட முறையில் நான் விரும்புகிறேன்.
ஆனால் எங்கள் நாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஒரு கட்சியிலும் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா வேறொருகட்சியிலும் இருப்பதால் தான் இந்தப் பிரச்சனை இன்னும் நீடித்துக் கொண்டே செல்கிறது என்றார் ஹக்கீம்.
6 மாதங்களில் தூத்துக்குடி-கொழும்பு கப்பல் போக்குவரத்து
இதற்கிடையே அடுத்த ஆறு மாதங்களில் தமிழகத்தின் தூத்துக்குடி நகருக்கும் இலங்கையின் தலைநகரானகொழும்புவுக்கும் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்கும் என்று ஹக்கீம் தெரிவித்தார்.
இது தொடர்பாக நாளை டெல்லியில் இந்திய அரசுடன் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது என்றும் அவர்கூறினார்.
இதைத் தொடர்ந்து சென்னை உள்ளிட்ட வேறு பல இந்தியத் துறைமுகங்களுடனும் இலங்கை கப்பல்போக்குவரத்தை மீண்டும் தொடங்கவுள்ளது என்றும் ஹக்கீம் தெரிவித்தார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications