ஜெ. உயிருக்கு ஆபத்து: பாதுகாப்பு அதிகரிப்பு
சென்னை:
விடுதலைப்புலிகள் மற்றும் அல் உம்மா தீவிரவாதிகளால் முதல்வர் ஜெயலலிதாவின் உயிருக்கு ஆபத்துஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அவரது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழகப் போலீசார்தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டசபையில் சமீபத்தில் புலிகள் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை இந்தியாவுக்கு பிடித்துக்கொண்டு வர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்கு வசதியாக இந்தியாவில் ஒரு நகரில் புலிகளின் அரசியல்ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம் தங்கிக் கொள்ள அனுமதிக்குமாறு புலிகள் தரப்பு கோரிக்கை விடுத்தது. இதைஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார். புலிகளை தமிழகத்திற்குள் நுழையவே விடக் கூடாது என்று திட்டவட்டமாககூறினார்.
ஜெயலலிதாவின் இந்த செயல்களைக் கண்டித்து இலங்கையில் போராட்டங்கள் நடந்தன. தமிழர் பகுதிகளில்பெரும் ஊர்வலங்கள் மற்றும் கண்டனக் கூட்டங்கள் நடந்தன. இலங்கையில் அமைதி ஏற்படுவதை ஜெயலலிதாவிரும்பவில்லை என்று வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் எண்ணம் உருவாகியுள்ளது.
இதையடுத்து புலிகள் தரப்பிலிருந்து ஜெயலலிதாவுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று தமிழக உளவுத்துறைக்குத்தகவல் வந்துள்ளது.
இதையடுத்து தற்போது அவருக்கு கொடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே ஜெயலலிதாவுக்கு இசட் பிரிவு கருப்புப் பூனைப்படை பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதுதற்போது அதிகரிக்கப்படும்.
மேலும் சமீபத்தில் போலீஸ் காவலில் இருந்து தப்பிய அல் உம்மா தீவிரவாதி இமாம் அலியின் கூட்டாளிகள்மூலமும் ஜெயலலிதாவுக்கு ஆபத்து உள்ளதாக உளவுத்துறைக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.
இதையும் கணக்கில் கொண்டு ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரத்தில்தெரிவிக்கப்பட்டது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications