விதிமுறையை மீறியதாக கருணாநிதி மீது வழக்கு
வேலூர்:
தேர்தல் விதிமுறைகளை மீறி வாணியம்பாடியில் பிரச்சாரம் செய்ததற்காக திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட 4பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த இரு நாட்களாக வாணியம்பாடி தொகுதி திமுக வேட்பாளரான நாகூர் ஈ.எம். ஹனீபாவுக்கு ஆதரவாகக்கருணாநிதி பிரச்சாரம் செய்தார்.
நேற்று முன் தினம் இரவு ஆம்பூரில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருணாநிதி பேசினார்.
தேர்தல் விதிமுறைப்படி இரவு 10 மணி வரை தான் பிரச்சாரம் செய்ய வேண்டும். ஆனால் கருணாநிதி அந்தவிதியை மீறி அன்று இரவு 10.10 மணி வரை ஒலிபெருக்கியைப் பயன்படுத்திப் பேசியதாகப் போலீசார் கூறினர்.
இதையடுத்து கருணாநிதி தவிர ஆம்பூர் நகர திமுக செயலாளர் ஆனந்தன், ஒலிபெருக்கி உரிமையாளர் சுப்ரமணிமற்றும் கோவை ராமநாதன் ஆகிய நான்கு பேர் மீதும் ஆம்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதே போல் சமீபத்தில் வாணியம்பாடி தொகுதியில் பிரச்சாரம் செய்த தமிழக முதல்வர் ஜெயலலிதா,பெருமாள்பேட்டையில் இரவு 10.15 மணி வரை பிரச்சாரம் செய்ததாகப் புகார் எழுந்துள்ளது.
எனவே ஜெயலலிதா மீதும் வழக்குப் பதிவு செய்யப்படுமா என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications