தக்கலை தமிழர் சவூதியில் மாரடைப்பால் மரணம்
தக்கலை:
சவூதி அரேபியாவில் மாரடைப்பால் மரணமடைந்த தக்கலையைச் சேர்ந்த அருள்தாஸ் என்பவரின் உடல்அவருடைய சொந்த ஊருக்கு இன்று கொண்டு வரப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்தவர் அருள்தாஸ். இவர் சவூதி அரேபியாவில் வேலை செய்துவந்தார். சவூதி அரேபியாவில் வசித்த இவர் கடந்த மார்ச் 28ஆம் தேதி தன் நண்பரின் வீட்டிற்கு சென்று இரவுஅங்கேயே தங்கியுள்ளார்.
ஆனால் அன்று இரவு திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் அருள்தாஸ் சத்தமில்லாமல் மரணம் அடைந்தார்.மறுநாள் காலையில் தான் அவருடைய நண்பருக்குத் தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாகஅருள்தாசின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்தார். அவர்களும் அருள்தாசின் உடலை உடனடியாக இந்தியாஅனுப்பி வைக்குமாறு அவரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
சவூதி அரேபியாவில் ஒருவர் எந்த நிறுவனத்தின் சார்பில் வேலைக்குச் செல்கிறாரோ அந்த நிறுவனம் தான் அவர்சம்பந்தப்பட்ட அனைத்து பொறுப்புகளையும் ஏற்க வேண்டும். ஆனால் அருள்தாசின் நண்பர்களுக்கு அவர் எந்தநிறுவனத்திற்காக வேலை பார்த்தார் என்பது தெரியவில்லை. வார விடுமுறையின் போது வந்து தங்கினாலும்,அருள்தாஸ் தான் வேலை பார்த்த முகவரியை நண்பர்களிடம் தெரிவித்திருக்கவில்லை.
இதையடுத்து கன்னியாகுமரியில் உள்ள அருள்தாசின் நண்பர்கள், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனைஅணுகி அருள்தாசின் உடலை மீட்டுத் தருமாறு வேண்டுகோள் விடுத்தனர். பொன். ராதாகிருஷ்ணனும் அதை ஏற்றுசவூதி தூதரக அதிகாரியை தொடர்பு கொண்டார். எந்தத் தகவலும் இல்லாமல் அருள்தாஸ் வேலை செய்தநிறுவனத்தை கண்டுபிடிப்பது அரிது என்று சவூதி தூதரக அதிகாரிகள் கூறிவிட்டனர்.
பின்னர், அருள்தாஸ் கடிதங்களை பார்த்து அவற்றின் மூலம் விவரங்கள் சேகரிக்குமாறு அவருடையகுடும்பத்தினரிடம் அமைச்சர் கூறினார். அதன்படி கடிதங்களைப் பார்த்தபோது தான் அருள்தாஸ் ரியாத் நகரில்இருந்தது தெரிய வந்தது. உடனே ரியாத் நகரில் உள்ள தூதரக அலுவலகத்தை தொடர்பு கொண்டு விசாரித்தார்ராதாகிருஷ்ணன். இதன் பின்னரே அருள்தாஸ் பணிபுரிந்த நிறுவனத்தின் முகவரி கிடைத்தது.
அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டால் மேலும் ஒரு சிக்கல் ஏற்பட்டது. அவர் அந்த நிறுவனத்தை விட்டு ஓடிவிட்டதாகவும், அதன் பின் வேறு சில நிறுவனங்களில் பணிபுரிந்ததாகவும், அவ்வாறு நிறுவனத்தை விட்டுஓடிவிட்டதால் அவரின் உடலை அனுப்பும் பொறுப்பை தாங்கள் ஏற்க முடியாது என்று அந்த நிறுவனம்கூறிவிட்டது.
கன்னியாகுமரியில் உள்ள நண்பர்களும் அமைச்சரும் குழப்பமான நிலையில் மீண்டும் முயற்சிகளைமேற்கொண்டார்கள். எதுவும் பலனளிக்கவில்லை.
பின்னர் சவூதியில் உள்ள அருள்தாஸின் நண்பர்களே அவரின் உடலை அனுப்பும் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். இன்று விமானம் மூலம் அருள்தாசின் உடல் திருவனந்தபுரம் கொண்டு வரப்படுகிறது. அங்குஅவருடைய உறவினர்களிடம் அது ஒப்படைக்கப்படும்.












Click it and Unblock the Notifications