கோட்டையில் மேலும் ஒரு தற்கொலை முயற்சி
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவிடம் மனு கொடுப்பதற்காக சென்னை தலைமைச் செயலகத்துக்கு நேற்று (புதன்கிழமை)வந்த ஒருவர் விஷம் குடித்ததையடுத்து, கோட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் தற்கொலை செய்து கொள்ளவருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஜெயலலிதாவை நேரில் சந்தித்து மனு கொடுக்க கோட்டைக்கு ஆயிரக்கணக்கானோர் தினசரி வருகிறார்கள்.ஆனால் அவர்கள் அத்தனை பேரும் ஜெயலலிதாவை சந்திக்க முடிவதில்லை.
இதனால் சிலர் மனம் நொந்து தற்கொலைக்கு முயல்கிறார்கள். இதுவரை 8 முறை இப்படி தற்கொலை முயற்சிகள்நடந்துள்ளன. இதில் 2 பேர் (தம்பதி) பரிதாபமாக இறந்து விட்டனர்.
இந்த நிலையில், புதன்கிழமை கோட்டைக்கு சென்னை வியாசர் பாடியைச் சேர்ந்த அசோக் குமார் என்பவர் வந்தார்.வறுமையில் கஷ்டப்படுவதால் தனியாக டெய்லர் கடை வைப்பதற்கு ரூ.15,000 கொடுத்து உதவ வேண்டும் என்றுஏற்கனவே அவர் மனு எழுதிக் கொடுத்துள்ளார்.
ஆனால் அது நிறைவேறாததையடுத்து புதன்கிழமை கோட்டைக்கு வந்த அவர் கையில் வைத்திருந்த விஷத்தைக்குடித்தார்.
இதையடுத்து அங்கு நின்றிருந்த போலீசார் விரைந்து வந்து அசோக் குமாரை தயாராக நிறுத்தப்பட்டிருந்த வேனில்ஏற்றி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications