பிரபாகரனைப் பிடிக்க காங்கிரஸ் தீர்மானம்
டெல்லி:
விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை இந்தியாவுக்குப் பிடித்துக் கொண்டு வரவேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் இன்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் தேதி தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப்பொதுக் கூட்டத்தின் போது மனித வெடிகுண்டு வெடித்ததில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலைசெய்யப்பட்டார்.
இந்தக் கொலை வழக்கில் பிரபாகரன் முக்கியக் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டார். கொலை நடந்த ஓரிரண்டுஆண்டுகள் வரை அவரை இந்தியாவுக்குப் பிடித்துக் கொண்டு வர வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட சிலகட்சிகள் கூறிக் கொண்டே இருந்தன.
ஆனால் நாளாக ஆக காங்கிரஸ் கட்சி கூட அதைக் கொஞ்சம் கொஞ்சமாக மறக்க ஆரம்பித்தது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 10ம் தேதி சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேசப் பத்திரிக்கை நிருபர்களைப்பிரபாகரன் சந்தித்தார். இலங்கையில் விரைவில் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தை, புலிகளுக்கு எதிரானதடைகள் உள்ளிட்ட ஏராளமான கேள்விகளுக்கு சுமார் 2 மணி நேரம் அவர் பேட்டியளித்தார்.
அப்போது ராஜிவ் கொலை பற்றி கேட்டபோது அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதாகக் கூறிய பிரபாகரன்இப்போதைக்கு அதைப் பற்றி மேலும் எதுவும் தான் பேச விரும்பவில்லை என்றும் கூறிவிட்டார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு தொலைக்காட்சியில் பிரபாகரனைக் கண்ட பல இந்தியக் கட்சிகள் மீண்டும் அவருக்குஎதிராக அறிக்கைகளை விட ஆரம்பித்தனர்.
புலிகளை இந்தியாவிற்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் அவர்களுக்கு எதிரான தடையை மேலும் நீடிக்கவேண்டும் என்றும் கூறியதோடு நின்று விடாமல், பிரபாகரனை இந்தியாவுக்குப் பிடித்துக் கொண்டு வரஇலங்கைக்கு ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்றும் தமிழக சட்டசபையில் ஆளும் அதிமுக அரசு தீர்மானம்கொண்டு வந்தது.
இதைத் தொடர்ந்து கடந்த 12ம் தேதி புலிகள் மீதான தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு இந்திய அரசுநீட்டித்தது. இந்தத் தடை நீட்டிப்பிற்கு இந்தியாவின் ஆளும் பாஜக அரசின் கூட்டணியில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோர் மட்டுமே எதிர்ப்புதெரிவித்தனர்.
இந்நிலையில் டெல்லியில் இன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஒருநாள் கூட்டம் நடைபெற்றது. ராஜிவ்காந்தியின் மனைவியும் தற்போதைய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தி இந்தக் கூட்டத்தைத்துவக்கி வைத்தார்.
ராஜிவ் கொலையில் முக்கியக் குற்றவாளியான பிரபாகரனை இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றுஇந்தக் கூட்டத்தில் முக்கியத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
மேலும் இலங்கையின் ஒற்றுமையைப் பாதிக்காத வகையில் அங்கு இனப் பிரச்சனைக்கு முடிவு காண அந்நாட்டுஅரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications