தருமபுரியில் சாக்கடையில் வீசப்பட்ட ஆண் சிசு
தருமபுரி:
தருமபுரி பஸ் நிலையம் அருகே பிறந்து சிறிது நேரமே ஆன ஒரு ஆண் குழந்தை சாக்கடையில் வீசப்பட்டு பிணமாகமிதந்து கொண்டிருந்தது.
தருமபுரியில் பெண் சிசுக் கொலைகள் மட்டுமின்றி ஆண் சிசுக் கொலைகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.தருமபுரி மக்கள் மனிதாபிமானம் அற்றவர்களாக மாறிக் கொண்டே வருகின்றனர்.
பெண் சிசுக் கொலைகளை தடுப்பதற்காக தொட்டில் குழந்தை திட்டம் போன்ற பல முயற்சிகளை அரசுமேற்கொண்டுள்ள போதிலும் தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் இன்று வரை பெண் சிசுக் கொலைகள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன.
சமீப காலத்தில் ஆண் சிசுக் கொலைகளும் நடந்து வருகின்றன. ஏழ்மையான குடும்பச் சூழ்நிலை காரணமாகவேவளர்ப்பதற்குக் கூட முடியாமல் குழந்தைகளைப் பெற்றெடுத்து இந்த ஊர் மக்கள் கொன்று வீசி வருகின்றனர்.
இந்நிலையில் தருமபுரி பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்று அதிகாலை சாக்கடையில் நேற்று ஒரு ஆண் குழந்தையின்பிணம் மிதந்து கொண்டிருந்தது. பிறந்து சிறிது நேரமே ஆன நிலையில் அந்த குழந்தை வீசி எறியப்பட்டிருந்தது.
குறை பிரசவத்தில் பிறந்த அந்தக் குழந்தைக்கு கை, கால் வளர்ச்சி இருந்தும் உடலில் போதிய வளர்ச்சிகாணப்படவில்லை.
ரத்தத் துளிகளுடன் மிதந்து கொண்டிருந்த அந்த குழந்தையின் பிணத்தை பன்றிகள் மொய்த்துக் கொண்டிருந்தன.அங்கிருந்த பன்றிகளை விரட்டிய மக்கள் அதை கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
இதற்கிடையே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து குழந்தையின் பிணத்தை மீட்டனர். இதுகுறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொட்டில் குழந்தையை கடத்திய நர்ஸ் கைது:
இந்நிலையில் இதே மாவட்டத்தில் உள்ள அதியமான் கோட்டை கிராம சுகாதார நிலையத்தைச் சேர்ந்த வேதலட்சுமிஎன்ற பெண் தொட்டில் குழந்தையை கடத்திய குற்றத்திற்காக நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டாள்.
அதியமான் கோட்டையில் உள்ள தலைமை அரசு மருத்துவமனையின் வரவேற்பு மையத் தொட்டிலில் போடப்பட்டஆண் குழந்தையை தனது உறவினர் ஒருவருக்காக எடுத்துக் கொடுத்துள்ளார் வேதலட்சுமி.
காவேரிபட்டணத்தைச் சேர்ந்த தனது உறவினர்களான குப்புசாமி-ஜெயா தம்பதிக்கு குழந்தைகள் இல்லாததால்,வரவேற்பு மைய தொட்டிலில் போட்ட ஆண் குழந்தையை எடுத்து அவர்களுக்கு வளர்க்க கொடுத்துள்ளார்வேதலட்சுமி.
நேற்று முழுவதும் விசாரணை நடத்திய போலீசார் பிறகு மாலையில் வேதலட்சுமியைக் கைது செய்தனர்.
இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் நேரத்தில் அரசு ஊழியர் மீது நடவடிக்கை எடுத்தால் பிரச்சினை வரும் என்பதால்விசாரணை வெகு தாமதாக நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும் அதியமான் கோட்டையில் நடைபெற்ற பல்வேறு பெண் சிசுக் கொலைகளை வேதலட்சுமிவெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். சிலவற்றை தடுத்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்கடத்தப்பட்ட ஆண் குழந்தையை வளர்ப்பதற்காகத் தான் அவர் எடுத்துச் சென்றாரா அல்லது விற்பதற்காகவா என்றுபோலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications