இலங்கை: ஜூன் இறுதியில் அமைதிப் பேச்சு?
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கை மற்றும் விடுதலைப்புலிகளுக்கு இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை வரும் ஜூன் மாத இறுதியில்தாய்லாந்தில் நடைபெறும் என்று அந்நாட்டு அரசியல் விவகாரத் துறை அமைச்சர் பெய்ரிஸ் இன்று தெரிவித்தார்.
ஆனாலும் இன்னும் பேச்சுவார்த்தைக்கான தேதி குறித்து முடிவு செய்யப்படவில்லை என்றும் பெய்ரிஸ்நிருபர்களிடம் கூறினார்.
புலிகளுக்கு எதிரான தடையை விலக்கிக் கொள்வது குறித்து வெகு விரைவில் இலங்கை அரசு முடிவெடுக்கும்என்றும் பெய்ரிஸ் கூறினார்.
தங்கள் மீதான தடையை விலக்கிக் கொண்டால் தான் பேச்சுவார்த்தைக்கே முன் வருவோம் என்று புலிகள்ஏற்கனவே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications