தேர்தல் விதிமுறைகளை மீறுகிறார் ஜெ.: நல்லகண்ணு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்து வருவதாக இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆர். நல்லகண்ணு குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து நல்லகண்ணு கூறியதாவது:
தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜெயலலிதா ஏகப்பட்ட வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார். பிரச்சாரத்திற்காக பணியில்இருக்கும் அதிகாரிகளை பயன்படுத்துகிறார்.
இவ்வாறு அவர் தேர்தல் விதிமுறைகளை மீறி வருகிறார்.
மேலும் இடைத் தேர்தல் நடக்கவுள்ள தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒட்டிய விளம்பரத்தை அகற்றிவிட்டு அதிமுகவினரின் விளம்பரத்தை ஒட்டியுள்ளது தமிழக அரசின் அதிகாரப் போக்கைக் காட்டுகிறது என்றார்நல்லக்கண்ணு.












Click it and Unblock the Notifications