கருணாநிதி ஒரு நம்பிக்கைத் துரோகி: பா.ஜ.க. கடும் தாக்கு
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி நம்புதலுக்கு உரியவர் கிடையாது. மாறாக, மதிமுக பொதுச் செயலாளரானவைகோதான் பாரதீய ஜனதாக் கட்சியின் உண்மையான நண்பராக இருக்கிறார் என்று தமிழக பாஜக தலைவர்கள்விமர்சித்துள்ளனர்.
மதிமுக சார்பில் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் பா. சுப்ரமணியத்தை ஆதரித்து வைகோ, பா.ஜ.க.தலைவர்கள் கிருபாநிதி, கே.என். லட்சுமணன் ஆகியோர் நேற்று (வெள்ளிக்கிழமை) கூட்டுப் பிரச்சாரம் செய்தனர்.
அப்போது பேசிய பா.ஜ.க. தலைவர்கள் கருணாநிதியை சரமாரியாக விமர்சித்தனர். குறிப்பாக கிருபாநிதி மிகக்கடுமையான சொற்களால் கருணாநிதியை விமர்சித்தார். பிரச்சாரக் கூட்டத்தில் கிருபாநிதி பேசுகையில்,
ஆரம்பத்தில் இருந்தே பா.ஜ.க.வின் முதுகில் குத்துவதே திமுகவின் வாடிக்கையாக இருந்து வந்தது. கூட்டணி நலன்கருதி அதை நாங்கள் பொறுத்துக் கொண்டு வந்தோம். ஆனால் தனது தவறை திமுக ஒருபோதும் உணர்ந்ததில்லை.
திமுக தலைவர் கருணாநிதி ஒரு நம்பிக்கைத் துரோகி. அவரை நம்பவே முடியாது. ஆனால் வைகோஅப்படியில்லை. பா.ஜ.கவின் உண்மையான நண்பராக அவர் விளங்குகிறார்.
மதிமுகவும் பா.ஜ.க.வின் உண்மையான கூட்டாளியாகத் தான் இருக்கிறது. ஆனால் திமுகவோ நண்பனாக நடித்துவந்துள்ளது என்றார் கிருபாநிதி.
பா.ஜ.க தலைவர்களுக்குப் பிறகு வைகோ பேசுகையில்,
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கருணாநிதி நீடிக்கிறார், ஆனால் தமிழக பாஜகவை கூட்டணியிலிருந்து விரட்டிவிட்டுள்ளார். இது மக்களை ஏமாற்றும் செயல்.
முடிந்தால் மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக விலகட்டுமே? அந்தத் தைரியம் அவர்களிடத்தில் இல்லை.
சட்டசபைக்கே செல்லாமல் புறக்கணித்து வருகிறார் கருணாநிதி. இந்த நிலையில் சட்டசபை இடைத் தேர்தலில்திமுகவுக்கு ஒட்டுப் போடுமாறு கேட்க அவருக்கு உரிமையில்லை என்றார் வைகோ.
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications