அப்போ மூலிகை பெட்ரோல்... இப்போ "ஜெரோசின்": மீண்டும் ராமர் பிள்ளை "அட்டகாசம்"
சென்னை:
சில ஆண்டுகளுக்கு முன் மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்துள்ளதாகக் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ராமர்பிள்ளை தற்போது மீண்டும் ஒரு புதிய எரிபொருளுடன் இந்தியாவைக் கலக்க வந்துள்ளார்.
இந்த முறை "ஜெரோசின்" என்ற புதிய பெயருடன் தனது புதிய எரிபொருளை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.சென்னை மாவட்ட விஸ்வ இந்து பரிஷத் இந்த எரிபொருள் தயாரிப்புக்காக ராமர் பிள்ளைக்கு உதவி செய்கிறது.
"ஜெரோசின்" எரிபொருள் அறிமுக விழா சென்னையில் வெள்ளிக்கிழமை நடந்தது. இதில் பாஜக எம்.எல்.ஏ.லட்சுமணன், சென்னை மாவட்ட வி.எச்.பி. தலைவர் சம்பத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில்ராமர் பிள்ளை அதிகமாகப் பேசவில்லை.
வி.எச்.பி. தலைவர் சம்பத் குமார் பேசுகையில்,
இந்த எரிபொருளுக்கு அனுமதி வழங்குமாறு தமிழ்நாடு சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும்மாநகராட்சியின் அனுமதியைக் கோரியுள்ளோம். அரசிடம் அனுமதி பெறத் தேவையில்லை. தேவைப்பட்டால்அதையும் செய்வோம்.
இப்போது இதன் விலை ரூ.13 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. போகப் பாக ரூ.7 அளவுக்கு இதுகுறைக்கப்படும் என்றார் சம்பத் குமார்.
இந்த எரிபொருளும் மூலிகையிலிருந்து தான் தயாரிக்கப்பட்டுள்ளது என்று கூறிய ராமர் பிள்ளை தனக்குநெருக்கடி ஏற்பட்டபோது கை கொடுத்த வி.எச்.பி. தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
ராமர் பிள்ளை தயாரித்த மூலிகை பெட்ரோல் போலியானது என்று விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு அவர் மீது ஏற்கனவே வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications