2வது ஏவுகணைச் சோதனை நடத்தியது பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்:
கோரி என்ற ஏவுகணையை செலுத்தி நேற்று சோதனை செய்த பாகிஸ்தான், இன்று காஸ்னவி என்றஏவுகணையையும் செலத்தியது.
தரையிலிருந்து தரை சென்று தாக்கும் வல்லமை பொருந்திய இந்த ஏவுகணை 290 கி.மீ. தூரத்திற்குச் சென்று தாக்கவல்லது.
ஹத்ப்-3 ரகத்தைச் சேர்ந்த இந்த காஸ்னவி ஏவுகணையைப் பாகிஸ்தான் இன்று காலை ஏவி சோதனை செய்தது.
பாகிஸ்தானின் பல ஏவுகணைத் தயாரிப்புகளுக்கு சீனா உதவி செய்த போதிலும் காஸ்னவி ஏவுகணை முழுக்கமுழுக்க பாகிஸ்தான் விஞ்ஞானிகளாலேயே தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இன்று இந்தச் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்காக அந்த விஞ்ஞானிகளை பாகிஸ்தான் ராணுவஆட்சியாளரான பர்வேஸ் முஷாரப் பாராட்டினார்.
அணுகுண்டை ஏந்திக் கொண்டு 1,500 கி.மீ. தொலைவிற்குச் சென்று தாக்கும் திறன் வாய்ந்த கோரி ஏவுகணையைப்பாகிஸ்தான் நேற்று ஏவி சோதனை நடத்தியது. இந்தச் சோதனையை நடத்திய கையோடு இந்தியாவுடன் நாங்கள்போருக்குத் தயார் என்றும் முஷாரப் கூறினார்.
அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளின் எதிர்ப்புக் குரல்களை அலட்சியப்படுத்தி எல்லையில்தற்போது பதற்றம் மிகுந்துள்ள சூழ்நிலையில் வரும் 28ம் தேதி வரை தொடர்ந்து ஏவுகணைச் சோதனைகளைநடத்தத் திட்டமிட்டிருப்பதாக ஏற்கனவே பாகிஸ்தான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த ஏவுகணைச் சோதனைகளால் நாங்கள் பயப்படப் போவதில்லை என்று இந்தியா நேற்று அறிவித்துவிட்டது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications