இடைத் தேர்தல்: சைதாப்பேட்டைக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு
சென்னை:
சைதாப்பேட்டையில் அதிமுகவினர் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் அங்குதேர்தல் பாதுகாப்பில் மத்திய ரிசர்வ் போலீஸ் படைகள் நிறுத்தப்படவுள்ளன.
முதலில் இங்கு மத்தியப் படைகள் வராது என்று சென்னை நகர போலீஸ் கமிஷ்னர் விஜய்குமார் அறிவித்திருந்தார்.சைதாப்பேட்டையில் 10 தற்காலிக காவல் நிலையங்கள் அமைக்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.
ஆனால், போலீசார் உதவியுடன் அதிமுகவினர் கள்ள ஓட்டுப் போடுவதற்காகத் தான இந்த தாற்காலிக காவல்நிலையங்கள் அமைக்கப்படுவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தார்.
மேலும் இந்தத் தொகுதியில் மத்தியப் படைகளை நிறுத்த வேண்டும் என அவர் தேர்தல் ஆணையத்துக்குக் கடிதமும்எழுதியிருந்தார். ஆனால், இந்தக் கடிதத்துக்கு தேர்தல் ஆணையம் பதில் சொல்லாமல் இருந்து வந்தது.
இதனால் மத்தியப் படைகள் வருவது சந்தேகத்திற்கிடமாகவே இருந்தது.
இந் நிலையில் சைதாப்பேட்டைத் தொகுதியில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைஈடுபடுத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரில் உள்ள சி.ஆர்.பி.எப். படைப் பிரிவிருந்து இந்த வீரர்கள் சென்னை வருகின்றனர்.
இதனால் அதிமுகவினரின் அராஜகம் ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்படும் என்று தெரிகிறது.
கராத்தே தியாகராஜன், ஆதிராஜாராம் ஆகிய அடாவடி ஆட்களின் தலைமையில் தேர்தலை சூறையாடவும் கள்ளஓட்டுப் போடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இவர்களுக்குபோலீசார் முழு உதவி அளிப்பார்கள் என்றும் அஞ்சப்பட்டது.
இப்போது மத்தியப் படைகள் வருவதால் இந்த கள்ள ஓட்டு ஆசாமிகள் வாலாட்ட இயலாது என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications