ரஷ்ய அமைச்சர் திடீர் பாகிஸ்தான் பயணம்
இஸ்லாமாபாத்:
ரஷ்ய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் அனடோலி சபயேவ் திடீர் பயணமாக இன்று பாகிஸ்தான் வந்தார்.
தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்புவதை பாகிஸ்தான் முதலில் நிறுத்த வேண்டும் என முஷாரபிடம்வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.
நேற்று இந்த விவகாரம் குறித்து ரஷ்ய அதிபர் புடினும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சும் விவாதித்தனர்.இதையடுத்து தனது வெளியுறவுத்துறை அமைச்சரை புடின் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்துள்ளார். இவர்இந்தியாவுக்கும் வருவார் என்று தெரிகிறது.
பிரதமர் வாஜ்பாயையும், முஷ்ரபையும் கஜாகிஸ்தானில் நடக்கும் ஒரு மாநாட்டின்போது நேரில் சந்தித்துப் பேசவும்புடின் ஆர்வம் தெரிவித்துள்ளார். இதற்கான அழைப்பை இருவருக்கும் அமைச்சர் அனடோலி மூலம் புடின்அனுப்பி வைத்திருப்பதாகத் தெரிகிறது.
இந்திய வீரர் பலி:
இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவம் நடத்தி பீரங்கித் தாக்குதலில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கொல்லப்பட்டார். ஜம்மூவில் நெளஷெரா என்ற இடத்தில் இச் சம்பவம் நடந்தது. இதில் மேலும் 9 பேரும்காயமடைந்தனர்.
இதையடுத்து கன ரக பீரங்கிகளால் இந்தியப் படைகள் திருப்பித் தாக்கின. இதில் பாகிஸ்தான் தரப்பில் பலர்இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், தநது தரப்பில் ஏற்படும் சேதங்களை பாகிஸ்தான் வெளியிடமறுத்து வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications