பெண்ணைப் பார்த்து "ஓ" போட்டவருக்கு கையில் காப்பு
சென்னை:
பால் வாங்கச் சென்ற பெண்ணைப் பார்த்து "ஓ" போட்ட வாலிபரை தலையில் இரண்டு "போட்டு" போலீசார் கைதுசெய்தனர்.
சென்னை அருகே உள்ள திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்தவர் ஷர்மிளி. இவர் நேற்று (திங்கள்கிழமை) காலை7 மணிக்கு பால் வாங்குவதற்காக வீட்டுக்கு அருகே உள்ள பால் பூத்துக்குச் சென்றார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்ற வாலிபர் ஷர்மிளியைப் பின் தொடர்ந்து கேலி செய்தவாறேசென்றுள்ளார். மேலும் "ஜெமினி" படத்தில் வரும் "ஓ போடு..." பாடலையும் பாடிக் கொண்டு சென்றார்.
இதனாால் அவமானமடைந்த ஷர்மிளி பால் வாங்காமலேயே வீட்டுக்குத் திரும்பினார். வீட்டில் இருந்தபெற்றோரிடம் இதுகுறித்து முறையிட்டார். இதையடுத்து ஷர்மிளியின் பெற்றோர் திருமுல்லைவாயில் போலீஸ்நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்தனர்.
போலீசார் உடனடியாக விரைந்து வந்து சாலையில் உட்கார்ந்து பெண்களைக் கேலி செய்து கொண்டிருந்தநாகராஜைப் பிடித்து இரண்டு போடு போட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.


Click it and Unblock the Notifications
