டெல்லி திரும்பினார் வாஜ்பாய்
டெல்லி:
ஹிமாச்சலப் பிரதேசத்திலுள்ள மணாலியில் ஓய்வெடுத்து வரும் பிரதமர் வாஜ்பாய் தன் விடுமுறையைப்பாதியிலேயே ரத்து செய்து விட்டு அவசர அவசரமாக டெல்லி திரும்பினார்.
மத்திய பாதுகாப்பு கேபினெட் கமிட்டியின் முக்கியக் கூட்டம் அவர் தலைமையில் அவருடைய வீட்டிலேயே இன்றுநடைபெறுகிறது.
பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷாரப் நேற்றிரவு அந்நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை குறித்துஇக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் அவருடைய பேச்சுக்குப் பதிலடி கொடுக்கும்விதத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் எல்லையில் தற்போது நிலவி வரும் பதற்றம் குறித்தும் பாகிஸ்தான் நடத்தி வரும் ஏவுகணைச் சோதனைகள்குறித்தும் நாட்டின் பாதுகாப்பு குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
நாட்டின் உணவு கையிருப்பு, எரிபொருள் கையிருப்பு, பொருளாதார நிலை ஆகியவை குறித்தும் இதில்விவாதிக்கப்படும்.
உள்துறை அமைச்சர் அத்வானி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், வெளியுறவுத்துறை அமைச்சர்ஜஸ்வந்த் சிங், பாதுகாப்பு ஆலோசகர் பிரிஜேஷ் மிஸ்ரா, முப்படைத் தளபதிகள், ராணுவ உளவுப் பிரிவினர், ரா,ஐ.பி. உளவுப் பிரிவுகளின் தலைவர்கள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் இந்தியா மீது பெரும் தாக்குதலை நடத்தத் தயாராகிவருவதாக இன்று காலை பெர்னாண்டஸ் கூறினார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்வது பற்றி எந்தவிதமான உறுதியையும் முஷாரப்அளிக்கவில்லை என்றும் கூறிய பெர்னாண்டஸ், எல்லையிலிருந்து இந்திய ராணுவத்தை விலக்கிக் கொள்வதற்கானவாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்தார்.
ஜனவரி 12ம் தேதி என்ன பேசினாரோ அதையேதான் மீண்டும் பேசியுள்ளார் முஷாரப். அவருடைய பேச்சில்எந்தவிதமான மாற்றமும் தென்படவில்லை என்று அத்வானியும் இன்று கூறினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications