தமாகா இணைப்பை ஒத்திவைக்க சோனியாவுக்குக் கடிதமா? தங்கபாலு மறுப்பு
சென்னை:
தங்கள் கட்சியுடன் தமாகாவை இணைப்பதை தள்ளி வைக்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ்தலைவரான சோனியா காந்திக்குத் தான் கடிதம் அனுப்பியுள்ளதாக வந்த செய்திகளை தமிழக காங்கிரஸ் கட்சியின்முன்னாள் தலைவரான தங்கபாலு மறுத்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரான இளங்கோவனை தங்கபாலு உள்ளிட்ட பல காங்கிரஸ் பிரமுகர்களும்ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வருகின்றனர்.
இவர்கள் தற்போது காங்கிரஸ் கட்சியுடன் தமாகாவை இணைப்பதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளதாகச் செய்திகள்வெளியாகின.
தமாகாவைக் காங்கிரசுடன் இணைப்பது குறித்த விஷயத்தில் எந்தவிதமான அவசர முடிவையும் எடுக்க வேண்டாம்என்றும் நம்முடன் இணைவதற்கு தமாகா விதித்துள்ள பல நிபந்தனைகளை காங்கிரஸ் தலைமை அவசரப்பட்டுஏற்றுக் கொண்டுவிடக் கூடாது என்றும் தங்கபாலு தலைமையிலான அதிருப்தி கோஷ்டியினர் சோனியாவுக்குக்கடிதம் எழுதியுள்ளதாகவும் அந்தச் செய்திகள் கூறின.
ஆனால் அந்தச் செய்திகளை மறுத்துள்ளார் தங்கபாலு. காங்கிரஸ் கட்சியுடன் தமாகா இணைவதை கட்சியின்மேலிடம் ஆதரிப்பதைப் போலவே தானும் ஆதரிப்பதாகவும் இந்தச் செய்திகள் தவறானவை என்றும் தங்கபாலுவிளக்கமளித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications