லஞ்சம் வாங்கிய பஞ்சாயத்து தலைவி ஜாமீனில் விடுதலை
சென்னை:
ரூ.400 லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட பஞ்சாயத்துத் தலைவியை ஜாமீனில் விடுதலை செய்ய சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே உள்ளது தம்பபாடி பஞ்சாயத்து யூனியனின் தலைவி பொன்னம்மாள்.
இந்தப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஒரு இடத்தில் "இந்திர நிவாஸ்" திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்க தன்னிடம் ரூ.400லஞ்சம் கேட்டதாக பொன்னம்மாள் மீது உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புப் போலீசார் பொன்னம்மாள் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.
இதையடுத்து தன்னை ஜாமீனில் விடுவிக்குமாறு நாமக்கல் நீதிமன்றத்தில் மனு செய்தார் பொன்னம்மாள். ஆனால்லஞ்ச வழக்குகளில் ஜாமீன் வழங்கும் உரிமை கோர்ட்டுக்குக் கிடையாது என்று மனு திருப்பி அனுப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார் பொன்னம்மாள்.
மனுவை விசாரித்த நீதிபதி மலை சுப்ரமணியன் பொன்னம்மாளை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications
