இன்று ஓய்கிறது இடைத் தேர்தல் பிரச்சாரம்
சென்னை:
சைதாப்பேட்டை, வாணியம்பாடி, அச்சிறுப்பாகம் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளுக்கும் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று (புதன்கிழமை) மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.
கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்து வந்த பிரச்சாரம் சமீபத்தில் விறுவிறுப்படைந்தது.
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் சைதாப்பேட்டை தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர்கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் ஒரே நேரத்தில் பிரச்சாரத்தில்ஈடுபட்டதால் தொகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சைதாப்பேட்டையில் அதிமுக, திமுக, மதிமுக ஆகிய மூன்று கட்சிகளும் போட்டியிடுகின்றன. இருப்பினும்அதிமுக, திமுக இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது. திமுகவின் கோட்டையாக கருதப்படும் இதில் அதிமுகசார்பில் நடிகர் ராதாரவியும், திமுக சார்பில் மா. சுப்ரமணியமும் போட்டியிடுகிறார்கள்.
வாணியம்பாடி தொகுதியில் திமுக சார்பில் பிரபல பாடகர் நாகூர் ஹனீபா போட்டியிடுகிறார். அதிமுக சார்பில்வடிவேலு போட்டியிடுகிறார். இங்கும் இந்த இரு கட்சிகளுக்கிடையே தான் பலத்த போட்டி நிலவுகிறது.
இதே போல் அச்சிறுப்பாக்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பார்வேந்தனும், அதிமுக சார்பில்பூவராகமூர்த்தியும் போட்டியிடுகிறார்கள்.
இந்நிலையில் இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. நாளை வீடு வீடாக சென்று வாக்குகேட்கலாம்.
வரும் 31ம் தேதி வெள்ளிக்கிழமை வாக்குப் பதிவு நடக்கிறது. ஜூன் 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றேமுடிவுகள் தெரிய வரும்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications