கள்ள ஓட்டு போட்டால் ஓராண்டு ஜெயில்: தேர்தல் கமிஷன் எச்சரிக்கை
சென்னை:
வரும் 31ம் தேதி நடைபெறவுள்ள இடைத் தேர்தலின் போது கள்ள ஓட்டு போடுபவர்களுக்கு ஓராண்டு ஜெயில்தண்டனை உண்டு என்று தமிழகத் தலைமைத் தேர்தல் கமிஷனர் மிருத்யுஞ்சய் சாரங்கி கூறினார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சைதாப்பேட்டை, வாணியம்பாடி மற்றும் அச்சிறுப்பாக்கம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் அமைதியாகவும்சுதந்திரமாகவும் நியாயமாகவும் இடைத் தேர்தல் நடப்பதற்குத் தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும்செய்யப்பட்டுள்ளன.
சைதாப்பேட்டையில் மட்டும் 10 கம்பெனி மத்திய ஆயுதப் படையினர் தேர்தல் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள்.தமிழகப் போலீசார் அவர்களுக்கு உதவியாக இருப்பார்கள்.
ஆனால் மற்ற இரண்டு தொகுதிகளிலும் முழுக்க முழுக்க தமிழகப் போலீசாரே பாதுகாப்புப் பணிகளைமேற்கொள்வார்கள்.
வாக்குச் சாவடிகளில் அசம்பாவிதம் எதுவும் நிகழ்ந்தால் அதைப் படமெடுப்பதற்காக வீடியோ குழுவினரும்தேர்தல் பார்வையாளர்களுடன் செல்வார்கள்.
வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது தலைமைத் தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்துள்ள 19ஆவணங்களில் ஏதாவது ஒன்றைக் காட்டினால் தான் ஓட்டு போட முடியும்.
ஆள் மாறாட்டம் செய்து கள்ள ஓட்டு போடுபவர்களைத் தடுக்கவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கள்ள ஓட்டு போடுபவர்களை உடனடியாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைக்க தேர்தல் அதிகாரிகளுக்குஉத்தரவிட்டுள்ளோம்.
இவ்வாறு கள்ள ஓட்டு போடுபவர்கள் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு இந்திய தண்டனைச்சட்டம் 171-எப் பிரிவின் படி அதிக பட்சமாக ஓராண்டு ஜெயில் தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டுமோஅளிக்கப்படும் என்றார் சாரங்கி.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications